செந்தில் பாலாஜி வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

செந்தில் பாலாஜி வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 5-  செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொ ணர்வு வழக்கை உயர்நீதிமன்ற 3ஆவது நீதிபதி விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோத மானது என்றும், சட்டவிரோத காவ லில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந் தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய் தார். மனுவின் அடிப்படையி லேயே செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக் கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு விசாரிப்ப தாக கூறி ஜூலை 4-க்கு (அதாவது நேற்று 4.7.2023) ஒத்திவைத்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை யின் மேல்முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் மீண்டும் நேற்று (4.7.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது "மேல்முறையீடு மனுக்கள் பலனற்ற தாகிவிட்டன, புதிய மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்ய வேண் டும்" என்று செந்தில் பாலாஜி தரப் பில் வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜ ரான வழக்குரைஞர் கூறியதாவது:

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படு கிறது. அரசியலில் செல்வாக்கு மிக்க செந்தில் பாலாஜியிடம் உட னடியாக விசாரணை நடத்த வேண்டி யது அவசியமாகும். இல்லையெனில் முழுமையாக விசாரணை நடத்த இய லாது. விசாரணையில் தாமதம் ஏற் பட்டால் இந்த வழக்கு நீர்த்து போக வாய்ப்பு உள்ளது.

எனவே செந்தில் பாலாஜியி டம் விசாரணை நடத்தும் விவகா ரத்தில் உச்சநீதிமன்றம் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அமைச் சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் இருக்கிறார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத னால் நாங்கள் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை.

செந்தில் பாலாஜி மருத்துவ மனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட வில்லை. இதனால் எங்களால் உரிய கடமையை செய்ய முடிய வில்லை. செந்தில் பாலாஜி வழக் கில் உச்சநீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று வழக்குரை ஞர் தெரிவித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு தொடர்பாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.

பின்னர் உச்சநீதிமன்றம் பிறப் பித்த உத்தரவில் கூறி இருப்ப தாவது:-

3ஆ-வது நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் நியமித்து விசாரணை நடத்த வேண் டும். இந்த வழக்கை மெரிட் அடிப்படை யில் விரைந்து உயர்நீதிமன்றம் விசா ரிக்க வேண்டும். வழக்கை விரைவாக விசாரிக்க பட்டியலிட வேண்டும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யலாம். நீதிமன்றம் பிணை வழங்காத நிலையில் செந் தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்று உத்தர விட்டு வழக்கு விசாரணையை வருகிற 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

No comments:

Post a Comment