ஒற்றைப் பத்தி, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

ஒற்றைப் பத்தி,

 சிவ-விஷ்ணு

‘தினமணி' வெள்ளி மணியில் (28.7.2023) ஒரு கட்டுரை.

‘‘சிவனும் - விஷ்ணுவும் இணைந்த தலம்'' என்பது தலைப்பு.

‘‘சிவனும், விஷ்ணுவும் இணைந்த காட்சி அருளும் கோவில்கள் குறைந்த எண்ணிக் கையில்தான் அமைந்துள்ளன. ஆனால், புகழ்பெற்ற ஆதி திருத்தலமாக விளங்குவது சங்கர நாராயணன் கோவில்தான்.

நல்லூர் என்பது மன்னர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட ஊரைக் குறிக்கும். (வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு சோழ அரசர் களால் தானமாகக் கொடுக்கப் பட்டது என்று பொருள்).

சோழர் காலத்தில் வழங்கப் பட்டதால் ‘சோழங்கநல்லூர்' என அழைக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. (சென்னை ஓ.எம்.ஆர். சாலை பக்கம் உள்ளது).

சைவ, வைணவத்தை சம மாகப் பாவித்து கோவில்களை எழுப்பிய விஜய நகர மன்னர் காலத்தைச் சேர்ந்ததாகத் தொல் லியல் ஆய்வாளர்கள் கருதுகின் றனர்'' என்கிறது ‘தினமணி!'

சைவ - வைணவத்தை அதா வது சிவன் - விஷ்ணுவை சம மாகப் பாவித்து என்பதன்மூலம் இரு மதப் பிரிவுகளும் சிவன், விஷ்ணு கடவுள்களும் சம நிலை யில் இல்லாது இருந்த நிலையை மறைமுகமாக ‘தினமணி' சுட்டு கிறது. இதற்குப் பெயர்தான் ‘அர்த்தமுள்ள இந்து மதம்!'

இந்த இடத்தில் ஒரு ஆதா ரத்தை ‘கல்கி' (11.4.1982) இதழி லிருந்தே கூற முடியும்.

‘திருவரங்கப் பெருமாள் கோவிலில் மொட்டைக் கோபுரம்' என்று வழங்கப்பட்டு வந்த கோபு ரத்தை சீர் செய்து இந்தியாவி லேயே மிகவும் உயரமான (226 அடி உயரம்) நெட்டைக் கோபுர மாக ஆக்கும் வேலை (திருப்பணி) நடந்து வருகிறது.

அந்த வைஷ்ணவ கோவி லின் கோபுரம் வேலைக்கு சைவ மதத்தைச் சேர்ந்தவரான காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் பல சைவர்களும் பண உதவி  செய் துள்ளனர். ‘‘இதேபோல சைவ ஸ்தலப் பணிகளுக்கு வைணவர் கள் ஏன் உதவுவதில்லை'' என்ற ‘கல்கி' இதழின் கேள்விக்கு ஜீயர் தந்துள்ள பதில்:

‘‘நான் சிவன் கோவில்களுக் குச் செய்யமாட்டேன். ஏன்னு கேட்டா, ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற் பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாரா யணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரம்மா சங் கரனை (சிவனை)ப் படைத்தான் என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ்பண்ணி, அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல, சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்து சக்தி பெற்றார்னு சாஸ் திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி தபஸ் பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாரா யணன் எப்பொழுதும் உள்ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக் கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபடமாட் டோம். நாராயணனைத் தெய்வ மாகக் கொண்டு வழிபட்டு மோட் சத்துக்குப் போக வழி  செய்து கொண்டவர்கள். நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். சிவன் கோவில் திருப்பணிக்குப்பணம் இருந் தாலும் தரமாட்டேன்.''

‘கல்கி' பேட்டி எப்படி இருக்கு? இன்னொரு வரலாற்றுத் தகவல் உண்டு (புராணமல்ல). சிதம்பரம் நடராஜன் கோவிலுக் குள்ளிருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் கடலில் தூக்கி எறிந்தான் என்பது தான் ‘கிளைமேக்ஸ்!'

 -  மயிலாடன்


No comments:

Post a Comment