பிஜேபிக்கு நெருக்கடி மாநில தலைவர்கள் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

பிஜேபிக்கு நெருக்கடி மாநில தலைவர்கள் மாற்றம்

புதுடில்லி, ஜூலை 6 ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில பாஜக தலைவர்களை மாற்றி பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் ஆட்சியில் இருந்து பாஜகவை இறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முறை ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பது என ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளு மன்ற தேர்தலை முன்னிட்டு 4 மாநில தலைவர்களை பாஜக மாற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்தும் வகையில் பாஜக தேசிய தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி தெலங்கானா மாநில பாஜக தலைவராக ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நபருக்கு மாநில பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதால் விரைவில் ஒன்றிய அமைச் சரவையில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மரன்டி நியமனம் செய்யபட்டுள்ளார். இதேபோல் மேனாள் ஒன்றிய அமைச்சர் புரந்தேஸ்வரி, ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காசோலை மோசடி : பிஜேபி பொதுச் செயலாளருக்கு ஆறு மாதம் சிறை

திருவள்ளூர், ஜூலை 6 காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செய லாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திரு வள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான இவர், திருவள்ளூரில் ஹார்டுவேர்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு திருவள்ளூர் அருகே உள்ளகூனிபாளையத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் ரூ. 7 லட்சத்தை கருணாகரனுக்கு கடனாக அளித்துள்ளார். வங்கியில் பணமில்லாமல்.. அந்த தொகையை கருணாகரன் காசோலைகளாக நாராயணமூர்த்திக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருப்பி அளித்துள்ளார். வங்கியில் பண மில்லாமல் அந்த காசோலைகள் திரும்பியதால், நாரா யணமூர்த்தி, கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை முடிவில் கருணாகரன் காசோலை மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, 4.7.2023 அன்று திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி தீர்ப்பு அளித்தார்.

அத்தீர்ப்பில், காசோலை மோசடி செய்த குற்றத்துக்கு கருணாகரனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து விரைவுநீதிமன்ற நடுவர் தீர்ப்பளித்தார்.  மேலும், ரூ.7 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் நாராயணமூர்த்தியிடம் கருணாகரன் திருப்பி அளிக்கவேண்டும் என உத்தர விட்ட விரைவுநீதிமன்ற நடுவர், கருணாகரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கியதோடு. அவரை நிபந்தனை பிணையில் விடுவித்தார்.

கணவர் மீது வரதட்சனை புகார் கொடுத்த பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி

பரேலி, ஜூலை 6  உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. அய்ஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர். உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஅய்ஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சமீபத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஜோதிக்கும் எனக்கும் 2010-இல் திருமணமானது. ஜோதி அய்ஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 16-ஆவது இடத்திலும், பெண்கள் பிரிவில் 3-ஆவது இடத்திலும் ஜோதி மவுர்யா தேர்ச்சி பெற்று அதிகாரியானார். 2015-இல் எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2019 வரை எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. அதன் பிறகு ஜோதியின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மாதம்தோறும் சுமார் ரூ.6 லட்சம் அளவுக்கு அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதை அவரே தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் 2020-இல் காஜியாபாத் ஊர்க்காவல் படை மாவட்ட கமாண்டண்டுடன் நட்பு ரீதியாக ஜோதி பழகி வந்துள்ளார். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இந்நிலையில் கடந்த வாரம் எனக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. உடனடியாக ஜோதியிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு அமைதியாக சென்றுவிடுமாறு என்னை சிலர் மிரட்டினர். இல்லாவிட்டால் என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதனிடையே, ஜோதி மவுர்யா தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

மேடையில் இடமில்லை - 

பா.ஜ.க., பெண் கவுன்சிலர் பதவி விலகல்

நாகர்கோவில், ஜூலை 6- நாகர்கோவிலில் அண்ணா மலை கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையில் இடம் தராததால் பா.ஜ.க., பெண் கவுன்சிலர் கட்சிப் பொறுப்பு களிலிருந்து விலகினார்.

நாகர்கோவில் நாகராஜாதிடலில் ஜூலை 2இல் பா.ஜ.க., சார்பில் நடைபெற்ற குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பொதுக் கூட்டம் நடைபெற்ற பகுதி 24ஆவது வார்டு என்பதால் அந்த வார்டின் பெண் கவுன்சிலர் ரோசிட்டா மேடையில் இடம் எதிர்பார்த்தார். ஆனால், அவர் மேடையின் கீழே முக்கிய பிரமுகர்கள் இருந்த பகுதியில் அமர வைக்கப் பட்டார். அண்ணாமலைக்கு அணிவிக்க தயாராக வைத் திருந்த ஆளுயர மாலையை பின்னர் காமராஜர் சிலைக்கு அணிவித்தார்.

இந்நிலையில் அவர் தனது கிழக்கு மண்டல மகளி ரணி செயலாளர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலை வர் தர்மராஜ் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.




No comments:

Post a Comment