ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : புதுச்சேரி சென்டாக்கில் MBC மாணவர்களுக்கு கட்ஆப் மார்க் 437. SC மாணவர்களுக்கு 235. ஆனால், EWS க்கு 127. இதுபற்றி...?

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் 1 : மிகப் பெரிய சமூக அநீதி இது. அரசமைப்புச் சட்டத்திற்கும் இது முரணானது (Article 46). உடனடியாக புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தவரும், சமூகநீதி பாதுகாப்பு அமைப்பும் இணைந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும் (ஆகஸ்ட் 1ஆம் தேதி கூட நடத்திடலாம் - காரைக்காலிலும் நடத்த வேண்டும்).

---

கேள்வி 2 : தாங்கள் உருவாக்கிய 31-சி அடிப் படையிலான 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் 30ஆம் ஆண்டைத் தொட்டிருப்பது பற்றி...?

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் 2 : 'அது நிற்காது; பயன் தராது' என்றெல்லாம் கூறி ஆசி தந்தவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்! பயனடைந்தவர்கள் கோடிக்கணக்கில் - நினைவில் வைத்துக் கூறுபவர்கள் தங்களைப் போன்ற சிலரே - என்றாலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது!

---

கேள்வி 3 : குஜராத்தை 'பிபர்ஜாய்' புயல் தாக்கப் போகிறது என்றவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் புயல் கோரத் தாண்டவம் ஆடியபோது இதுபோன்ற கூட்டம் நடத்தாததோடு, பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடக்கூட வரவில்லையே?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 3 : ஹி.... ஹி.... ஹி.... என்னங்க அது குஜராத் மாடல் அல்லவோ! இது வெறும் திரா£விட மாடல் - சூத்திரருக்குரிய ஆட்சிதானே! இதற்கு என்ன அவசரம்! அவரவர் பாப புண்ணிய - கர்ம வினைப் பயன்படிதான் நடக்கும்? நோக்கு புரியாதோ!

---

கேள்வி 4 : மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களைப் பற்றி ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிடவில்லையே - காரணம் என்ன?

- ம.சுரேஷ், கோயமுத்தூர்

பதில் 4 : அந்தப் பெரும் ஊடகங்கள் எல்லாம் கோணிப் புளுகன் கொயபெல்சிடம் இரவல் வாங்கிய கோணிப்பை மூட்டைக்குள்ளே சுருட்டப்பட்டு, 'ஜும்லாக்களாக" இருக்கிறார்கள்!

கார்ப்பரேட் முதலாளிகள் கையில்தானே அவ்வூடகங்கள். அந்தப் பெரு முதலாளிகள் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பையில்தானே! பின் எப்படி சார்?

---

கேள்வி 5 : தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு மகளிர் உரிமைத் திட்டத்தினால் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் பயன் கிடைக்குமா?

- வெ.கோமதி, சிவகங்கை

பதில் 5 : நிச்சயமாக! படிப்படியாக - வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை, அவ்வளவுதான்!

---

கேள்வி 6 : அண்ணா, கலைஞர் வளைவுகள் உள்ளது போல் பெரியார் திடல் அருகே தந்தை பெரியார் வளைவு அமைக்கப்படுமா?

- தி.சந்திரமோகன், மதுரை

பதில் 6 : அய்யாவின் 150ஆம் ஆண்டுக்குள் நிச்சயம் - அதற்கு முன்பே அமைய முயற்சிகள்!

---

கேள்வி 7 : சின்னத்திரை நடிகர் 'எதிர்நீச்சல்' மாரிமுத்து ஒரு பேட்டியில், "நான் கடவுள் மறுப்பாளன்" என்று கூறியுள்ளாரே, தங்கள் கருத்து...? 

- அன்புமணி, புரசைவாக்கம்

பதில் 7 : பாராட்டி, வாழ்த்துகிறோம்!

---

கேள்வி 8 : 'இந்தியா' கூட்டணி பற்றி தங்களது கருத்து...? 

- ஆனந்த், மயிலாடுதுறை

பதில் 8 : நாளைய ஆட்சியாளர்கள் அவர்கள் - உண்மையான மக்கள் தீர்ப்புப்படி!

---

கேள்வி 9 : ராகுல்காந்தியின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் பற்றி...?

- முகிலன், வேலூர்

பதில் 9 : அவர் ஒரு கொள்கைப் போராளி - என்றும்! இந்திய அரசியலில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பை - அவரால்தான் அதன் பல்லைப் பிடுங்கி விஷத்தை எடுக்க முடியும் என்ற நன்னம்பிக்கை நமக்குண்டு. 

---

கேள்வி 10 : மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?

- ராஜேந்திரன், திருநெல்வேலி

பதில் 10 : தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சி அரசியல் தட்டில் முறையாக பரிமாறப்பட்டால் பயன் மிகுந்தது - குறிப்பாக மலேசியத் தமிழ்க் குடிகளுக்கு.


No comments:

Post a Comment