கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.7.2023


டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

👉ரபேல் ஒப்பந்தத்திற்கு பலனாக மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் பாஸ்டைல் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என ராகுல் சாடல்.

👉டெல்லி அரசுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மோடி அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉கல்வியும் பொது சுகாதார அமைப்பும் திராவிட மாடலின் இரு கண்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் பெருமிதம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 மழைக்கால கூட்டத்தொடரில், மோடி அரசு கொண்டு வரும் மூன்று மசோதாக்களை  காங்கிரஸ் எதிர்க்கும், மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்த உள்ளது.

தி டெலிகிராப்:

👉 பாஜகவின் ஹிந்துத்வாவிற்கு எதிராக பந் துத்வா (நட்புறவு) எனும் முழக்கத்தோடு, பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க, ஜார்க்கண்ட் மாநில உரிமை ஆர்வலர் குழுக்கள் பிரச்சாரம் செய்திட முடிவு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment