ஓடியது உனது கால்கள்தானே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

ஓடியது உனது கால்கள்தானே!

தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; வழங்கியவர் தலைவர் கலைஞர். 

இந்த பரிசு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான், பாலின சோதனையில் சாந்தி தோல்வியுற்று, அவரின் பதக்கம் பறிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மிகவும் வேதனையில் இருந்தார். பன்னாட்டு அளவில் பதக்கம் பெறுவது என்பது கிட்டத்தட்ட உயிரைக்கொடுத்து விளையாடி வெற்றி பெறுவது போன்றது. ஆனால் மனித நேயமற்ற சிலரால் அவரது பாலினம் தொடர்பான விவாதம் எழுப்பப்பட்டு அவரது எதிர்காலமே இருண்டு போகவைத்தனர்.  ஆனால் கலைஞர் அந்த வேதனை உணர்ந்தார். 

கலைஞர் ஓடிக்கொண்டு இருக்கும் விவாதங்கள் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.   ஓடியது இந்தக்கால்கள் தானே உனது உழைப்பிற்கானது உனக்கானது என்று கூறி 15 லட்சம் பரிசைப் பெற, முழுத் தகுதி உனக்கு உண்டு” என்று கூறி காசோலையை கொடுத்தார்.  உண்மையில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒன்று. எளிய மக்களின் மீது தீராத அன்பு இருக்கும் ஒரு தலைவரால் மட்டுமே இதை செய்ய முடியும். 

குறிப்பு: தடகள வீராங்கனை சாந்தி  தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட தனது வெள்ளிப் பதக்கத்தை திரும்பப் பெற்றுத்தரவும், நிரந்தர பயிற்சியாளர் பணி அளிக்க வேண்டியும் 05.04.2015 அன்று ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சரையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் தலைநகர் டில்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது அவரது கோரிக்கை ஏற்கப்படும் என்று இருவருமே உத்தரவாதம் அளித்தனர்

ஆனால் அவர் சென்னை வந்த பிறகு அவருக்கு அமைச்சர்களிடமிருந்து வந்த பதில் அவரது வாழ்க்கையில் இருளாக்கி விட்டது  அவர்கள் அளித்த கடிதத்தில், பறிக்கப்பட்ட பதக்கத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் அவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இயலாது என்று கைவிரித்துவிட்டனர். 

No comments:

Post a Comment