தமிழர் உணவில் தக்காளி வந்தது எப்போது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

தமிழர் உணவில் தக்காளி வந்தது எப்போது?

போர்த்துகீசியர்களோடு வந்த தக்காளி இந்திய சமையலறையில் முக்கிய அங்கமாக மாறி சாமானியர்களின் அன்றாட செலவீனங்களையே அசைத்துப் பார்க்கும் ஒன்றாக மாறியுள்ளது.

தக்காளியின் அறிவியல் பெயர் சோலனம் லைகோபெர்சிகம்(Solanum lycopersicum). தக்காளி சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளியில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதமுள்ள 5 சதவீதத்தில் மாலிக், சிட்ரிக் அமிலங்கள், குளுட்டமேட்ஸ், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன. தக்காளி சிகப்பு நிறத்தில் இருப்பதற்கு லைகோபீன் தான் காரணம். `டொமெட்டோ` என்ற ஆங்கில வார்த்தை ஸ்பெனீஷ் வார்த்தை யான `டொமெட்` என்பதில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ஸ்பெனீஷ் வார்த்தை ஆஸ்டெக் மொழியுடன் தொடர்புடையது.

ஆஸ்கெட்டில் அவர்கள் சோடோமாட்டோ என்றால் குண்டான வயிறு என்று பொருள்

1595ஆம் ஆண்டில் ஸ்பெயினின் எழுதப்பட்ட ஒரு தாவரவியல் கட்டுரைத் தொகுப்பில் “தக்காளியின் வரலாறு: ஏழைகளின் ஆப்பிள்” என்ற தலைப்பில் ஞீஷீtஷீனீணீtவீறீ என்ற வார்த்தை முதன்முதலில்  புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கிறது.

“தக்காளி ஒருகுறிப்பிட்ட இடத்தில்தான் தோன்றியது என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. இருப்பினும், சோலனேசி தாவரங்களில் கோடிக்கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் அவை உருவத்திற்கு வந்துள்ளது. 

தக்காளியை வனத்திலிருந்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியவர்கள் ஈகா இன மக்கள் தான். அப்பகுதி தற்போது பெரு, பொலிவியா, சிலி மற்றும் ஈக்வடார் என்று அறியப்படும் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டஸ் மலைத் தொடர்களில் தக்காளியை முதன்முதலில் பயிரிட்டனர். கி.பி.700களில் ஆஸ்டெக்ஸ் மற்றும் இன்காஸ் கலாச்சாரங்களில் தக்காளி பயிரிடப்பட்டன என்பதற்கு சான்றுகள் உள்ளது, பெருவில் உள்ல சில பிரமீடுகளில் தக்காளி விதைகள் கண்டெடுக்கப்பட்டது. .

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இங்கு குடியமர தொடங்கிய போது பயிரிடப்பட்ட தக்காளிகள் அளவில் சிறியவையாகவும் புளிப்புச் சுவை மிகுந்தவையாகவும் இருந்தன.” 

கி.பி.300களில் வடக்கு நோக்கி இடம் பெயர்ந்த சில நாடோடிக்குழுக்கள் இந்தச் செடியை தென் அமெரிக்காவில் இருந்து மத்திய அமெரிக்காவுக்கு எடுத்து சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. மாயன் மக்கள் அங்கு தக்காளியை பயிரிடத் தொடங்கினர்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1490களில் தென் அமெரிக்காவை அடைந்த பின்னர், தக்காளி அய்ரோப்பாவுக்கு சென்றிருக்கலாம் என்று உணவுப் பொருள் குறித்த வரலாற்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர். தென் அமெரிக்காவின் தட்பவெப்ப நிலைக்கு ஓரளவுக்கு ஏற்ற மத்திய தரைக்கடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த தக்காளி வசதியாக வளரும். ஆரம்பத்தில் அய்ரோப்பாவில் விளையும் தக்காளி மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும், அவை மஞ்சள் ஆப்பிள்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் ரவி கூறுகிறார்.

தக்காளி எப்படி இந்தியாவுக்கு வந்தது?

போர்ச்சுகீசியர்கள் தான் தக்காளியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்று உணவு வரலாற்றாசிரியர் கேட்டி அச்சையா தனது `Indian Food: A Historical Companion’ நூலில் குறிப்பிடுகிறார்.

அந்த புத்தகத்தில், “தக்காளி, மக்காச் சோளம், பாலாடைக்கட்டி, முந்திரி மற்றும் மிளகாய் போன்ற பல பயிர்கள் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன ” என்று கேட்டி விளக்கியுள்ளார்.

இந்தியாவில் உள்ள வெப்பநிலையும், அதன் மண்வளமும் தக்காளி பயிரிடு வதற்கு ஏற்றவையாக இருந்தது இந்தியாவில்  முதன்முதலில் தக்காளி தக்காண பீடபூமி (இன்றைய மேற்கு கருநாடகா, தெற்கு மகாராட்டிரா, ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் பயிரிடப்பட்டது.  பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தக்காளி கங்கைச் சமவெளி மற்றும் கிழக்கு இந்தி யாவில்  விளைவிக்கப்படும் தக்காளிகள் பெருமளவில் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டன” புளியை விட தக்காளி விலை குறைவாக இருந்ததாலும், அதன் தனித்துவம் மிக்க சுவைக்காகவும் கறிகளில் புளிக்கு மாற்றாக தக்காளி பயன்படுத்தப்பட்டது.

நமது அன்றாட உணவில் தக்காளி இடம் பிடித்தது எப்படி?

“தக்காளிக்கு இந்திய மண்ணில் 200 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கிடையாது. ஆரம்பத்தில், தக்காளி அளவில் சிறியதாக இருந்தது. ஆனால், கலப்பினத் தக்காளி வந்த பிறகு, அவற்றின் நுகர்வு வெகுவாக அதிகரித்தது. தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைக்குப் போய்விட்டது.”

2022இல் இந்தியாவில் 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது தற்போது, உலகளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. 2022இல் 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை, மத்தியப் பிரதேசத்தில் 14.63 சதவீதமும், ஆந்திராவில் 10.92 சத வீதமும், கருநாடகாவில் 10.23 சதவீதமும் தக்காளி பயிரிடப்படுகிறது.

தக்காளி, வெங்காயம் போன்றவை களின் விலை திடீரென அதிகரிப்பது பதுக்கல் காரர்களின் நுணுக்கமான மோசடியாகும் பருவ மழைக்காலம் துவங்கும் முன்பு விலை மிகவும் சொற்பமாக சரியும் அதைப் பயன்படுத்தி பதுக்கல்காரர்கள் பல டன் தக்காளிகளை சரியான தட்பவெப்பநிலைகொண்ட அறைகளில் பதுக்குவார்கள். பருவமழை துவங்கியதும் வரத்து குறையும்போது உடனடியாக பதுக்கியதை சந்தையில் வெளியிடுவார்கள்.

அதுவரை ஆட்சியாளர்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம் எடுக்கிறோம் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். ஆனால் செய்யமாட்டார்கள். 

தமிழ்நாடு அரசு உடனடியாக ரேசன் கடைகளில் விற்பதற்கு உத்தரவிட்ட காரணத்தால் விலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது, இதன் மூலம் இனி பதுக்கல்காரர்களும் தேவைக்கு அதிகமாக பதுக்கி வைக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment