அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

திருச்சி, ஜூலை 9 - அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நேற்று (8.7.2023) நடைபெற்றது.  

கூட்டத்தில் பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர் வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூடுதல் அரசுச் செயலர் பிர தீப் யாதவ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைர மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் பேசுகையில்,

 “திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு 2,227 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம்  ஏற்பட்ட விபத்துகள், 1,208. இவ் விபத்துகளில் திருச்சி மாநகரத்தில்  150 பேரும், மாவட்டத்தில் 540 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர, எந்த வாகனத்திலும் செல்லாத 118 பாதசாரிகளும் உயிரிழந்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் ‘ஹாட்  ஸ்பாட்டுகள்’ பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், விபத்துகள் ஏற்படும் இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசா ரணை நடத்துகின்றனர். தொடர்ந்து ஒரே இடத்தில் விபத்துகள் நடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,

“அலைபேசியில்  பேசிக் கொண்டே செல்பவர்கள், தலைக்கவசம் அணி யாமல் செல்பவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகளவு மாணவர் களை ஏற்றிச்  செல்லும் ஆட்டோக்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து படிக்கட்டில் யாரும் பயணிக்காத நிலையை ஏற் படுத்த வேண்டும். சாலைகளில் மாடு களை அவிழ்த்து விடுவதால் பல  நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின் றன. மாவட்ட நிர்வாகம் மாட்டைப் பிடித்து இருமுறை அபராதம் விதிக்க வேண்டும். இதை மீறினால், மாட்டை ஏலம் விட்டு அரசு கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment