‘பெல்’ நிறுவனத்தில் சேர விருப்பமா... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

‘பெல்’ நிறுவனத்தில் சேர விருப்பமா...

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (டிரைய்னி) - மெக்கானிக்கல் 6, டெக்னீசியன் ‘சி’ எலக்ட்ரானிக் மெக்கானிக் / பிட்டர் 10, கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, டெக்னீசியன் பணிக்கு அய்.டி.அய்., கிளார்க் பணிக்கு பி.காம்., / பி.பி.எம்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 295. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.8.2023

விவரங்களுக்கு: www.bel-india.in

No comments:

Post a Comment