பழங்கால புலவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

பழங்கால புலவர்கள்

பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான் அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால் சுவாமிகள், அடிகள், நாயன்மார், ஆழ்வார்ஆகி விடுவார்கள். அவர்கள் அதிகமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்த பக்கத்தில் உள்ள கடவுள்களைப் பற்றிப் பாடிய பாட்டுகள் 'பிரபந்தங்கள்' ஆகிவிடுகின்றன. அக்கோவில்கள் 'ஸ்தலங்கள்' ஆகிவிடுகின்றன. பாட்டுகள் 'தேவ ஆரங்கள்' ஆகிவிடுகின்றன.

 ('விடுதலை' 3.9.1956)


No comments:

Post a Comment