அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு - வயதாவதை தடுக்கும் வேதிக் கலவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு - வயதாவதை தடுக்கும் வேதிக் கலவை

கேம்பிரிட்ஜ் ஜூலை 17-  மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத்தில், 

“மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம்.  வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதை இப்போது நிரூபித்துள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்பாக எங்கள் குழு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஆராய்ச்சி யின் விளைவாக வயதைக் குறைக்கும் மூலக் கூறு களைக் கண்டுபிடித்துள்ளோம். குறைந்த விலையில் மனித செல்களுக்கு புத்துணர்வூட்டுவதற்கான ஒரு முன்நகர்வு இது” என்று பதிவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக இந்த வேதிக்கலவை எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், மூளைத் திசுக்கள், கிட்னி, பார்வை ஆகியவற்றில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment