ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: சட்ட அதிகாரி 2 சயின்டிபிக் ஆபிசர் 1, உதவி ஆர்க்கிடெக் 53, சயின்டிஸ்ட் ‘பி’ 6, ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் 2, மைன் சேப்டி 2, டிரைக்டர் ஜெனரல் 1, நிர்வாக அதிகாரி 3 என மொத்தம் 71 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: உதவி ஆர்க்கிடெக் பணிக்கு பி.ஆர்க்., மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: நிர்வாக அதிகாரி, சயின்டிபிக் ஆபிசர் 30, மற்ற பதவிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 27.7.2023

விவரங்களுக்கு: upsconline.nic.in



No comments:

Post a Comment