வியாபாரமே இல்லை, நீங்கள் இருந்து கடையை நடத்துங்கள் வரி விசாரிப்பு அதிகாரிகளை கடையில் வைத்து பூட்டிய வணிகர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

வியாபாரமே இல்லை, நீங்கள் இருந்து கடையை நடத்துங்கள் வரி விசாரிப்பு அதிகாரிகளை கடையில் வைத்து பூட்டிய வணிகர்கள்

கோழிக்கோடு, ஜூலை 18 - கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரி கள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கோழிக்கோடு மாவட் டம் திருவண்ணூர் எஸ்.எம். தெருவில் உள்ள 25 கடைகள் மற்றும் அரையிடத்துப்பாலம் பகுதியில் உள்ள மால் உள்ளிட்டவைகளில்  ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அந்த கடைகளில் சோதனை நடத்தினர். 

அதிகாரிக ளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்த கடைக ளில் இருந்த வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந் தனர்.

அவர்கள் அதிகாரிகளின் நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித் தனர். வணிகமே நடப்பதில்லை அன்றாட செலவிற்கும் பணியாளர் களுக்கு ஊதியம் கொடுப்பதற்குமே வணிகத்தில் வந்த பணம் சரியாக உள்ளது என்று பதிவேடுகளைக் காண்பித்தனர்.

இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களின் சோதனையை தொடர்ந் தனர். இதில் வெறுத்துப் போன வியாபாரிகள், சோதனையில் ஈடு பட்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சிலரை கடைக்குள்ளிருந்து வெளியே விடாமல்  ஒருநாள் முழு வதும் உள்ளே இருந்து எவ்வளவு வணிகம் நடக்கிறது என்று பார்க் கக்கூறி அவர்கள் வெளியே வந்து விட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்து கடைக்குள் இருந்த சோதனை அதிகாரிகளை மீட்டனர்.

No comments:

Post a Comment