மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யும் மோடி அவர்களே, மணிப்பூரில் பள்ளி மாணவிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுக் கொல்லும் அவலத்திற்கு முடிவு என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யும் மோடி அவர்களே, மணிப்பூரில் பள்ளி மாணவிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுக் கொல்லும் அவலத்திற்கு முடிவு என்ன?

இம்பால், ஜூலை 9  மணிப்பூரில் தொடரும் வன்முறைகளுக்கு இடையே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன் முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் அதிகமானோர் அகதிகளாக இடம் பெயர்ந் துள்ளனர். மணிப்பூர் வன்முறையானது மைத் தேயி, குக்கி இனக்குழுக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளது. குக்கி இனக் குழுவினர் மட்டுமே வசிக்கும் பகுதியில் சுயாட்சி கவுன்சில் நிர்வாகம் கோரி அடுத்த கட்டமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயுதம் தாங்கிய குக்கி கிராம காவல்படையினரும் இணைந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் 50,000க்கும் அதிக மான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த நிலையில் மணிப்பூரில் பள்ளிக் கூடங்கள் 2 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டன. பெரும் அச்சத்துடன் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் இம்பால் மேற்கு பகுதியில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இம்பால் மேற்கு பகுதியில் சிசுநிகேதன் பள்ளிக்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்தது இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் அப்பெண் சிக்கியதாகவும் 10 பேர் படுகாய மடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாய மடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கங்போக்பி மாவட்டத்தில் இரு இனக்குழுவினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மற்றொரு இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவின் வீரர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு தீ வைக் கப்பட்டது.

24 மணிநேரத்தில் படுகொலைகள்! 

விஷ்ணுபூர் மாவட்டத்தின் கங்க்வி பகுதி தான் மிகவும் பதற்றமாக காணப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் மைதேயி மற்றும் குகி, நாகா இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந் நிலையில், விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. இதில் பழங்குடியின தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். பொது மக்களில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கலவரக் காரர்கள் வனப் பகுதிகளில் மறைந்திருந்து திடீர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், மற்ற மாவட்டங்களில் நிலைமை அமைதியாகக் காணப்படுகிறது என்று மாநில அரசு கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக அமலில் இருக்கும் இணைய சேவைகளுக்கான தடை மேலும் சில நாள் களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் பரவாமல் தடுக்க ஜூலை 10 ஆம் தேதி வரை இணையசேவைகள் இணைப்புக்கான தடை அமலில் இருக்கும் என்றும் மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை மிக மோசமாக இருக் கிறது; ஆகையால் இணையசேவை தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை கள் அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் இணையத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  

கிட்டத்தட்ட உள்ளநாட்டுப் போர் போல் மாறியுள்ளது மணிப்பூர் மாநிலம். ஆனால் அங்கு சென்று அமைதியை நிலைநாட்ட பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரம் பெற்ற பிரதமர் தெலங்கானா மாநிலத்தில் கோசாலைக்குச்சென்று மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து அக மகிழ்கிறார்.

No comments:

Post a Comment