மலேசிய திராவிடர் கழகம் ஜொகூர் மாநிலம் சின்னப்பன் காலமானார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

மலேசிய திராவிடர் கழகம் ஜொகூர் மாநிலம் சின்னப்பன் காலமானார்

மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜொகூர் மாநிலம், கங்கார் பூலாய் கிளையின் மேனாள் தலைவருமான மானமிகு சின்னப்பன் அவர்கள் 21.7.2023 அன்று மறைந்த துயரச் செய்தி கேட்டு வருத்தமடைகிறோம். மறைந்த சின்னப்பன் அவர்கள் ஜொகூர் மாநிலத்தில் மலேசிய திரா விடர் கழக செயல்பாடுகள் வலுப்பட - திறம்பட பாடுபட்டவர். அறிஞர் அண்ணா நடமாடும் நூலகத்தின் பொறுப்பாளராகவும் சின்னப்பன் அவர்கள் செயல்பட்டவர். அவரது வாழ்விணையர் மானமிகு லட்சுமி அவர்களும் மாநில கழக மகளிரணிப் பொறுப்பாளராக இருந்து செம்மையாகப் பணியாற்றியவர் ஆவார். 

மறைந்த சின்னப்பன் அவர்களின் குடும்பத்தாருக்கும், மலேசிய திராவிடர் கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம் 

முகாம்:

மலேசியா - கோலாலம்பூர்

 


No comments:

Post a Comment