தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா?

கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

திண்டுக்கல்,ஜூலை17- ''தமிழ்நாட்டை ஒட்டு மொத் தமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது,'' என, காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திண்டுக்கல்லில் நேற்று (16.7.2023) அவர் கூறிய தாவது:

காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதைவிட,வேறு வகையில் அவருக்கு மரியாதை செய்ய முடியாது. தொழில் துறை, அணைக்கட்டுகள், விவசாய மேம்பாடு, அனைத்து கிராமங்களிலும் கல்வி என, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் காமராஜர். ஒன்றியத்தில் 9 ஆண்டு கால பா.ஜ.க.ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய திட்டத்தை கூட கொடுக்கவில்லை. எல்லா திட்டங் களுமே வட மாநிலங்களுக்கு தான். அவற்றின் வளர்ச் சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெறுவது எல்லாம் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள்தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட் டுமே இருக்கிறது. அதோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவு பெற்றுவிட்டன.

தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரி கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மொரிசீயஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத வரை அவர் குற்றவாளி கிடையாது. பொது சிவில் சட் டத்தை நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள் மட்டு மின்றி, பொதுமக்களும் எதிர்க்கின்றனர்.

பல மதங்கள், ஜாதிகள், மொழிகள் கொண்ட இந்தி யாவில் ஒரே சட்டம் என்பது சாத்தியமில்லை.  -இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment