மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோருக்கு மெழுகுவத்தி ஏந்தி காங்கிரஸ் சிறுபான்மையினர் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோருக்கு மெழுகுவத்தி ஏந்தி காங்கிரஸ் சிறுபான்மையினர் மரியாதை

 சென்னை, ஜூலை 31- மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் சாந்தோமில் இரங்கலும் நினைவேந்தலும் செலுத்தப்பட்டது.

மணிப்பூரில் இரு பிரிவினரி டையே கடந்த மே மாதம் முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் அம்மாநில பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பழங் குடியின பெண்கள் பாலியல் வன் கொடு மைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இரங்கல் செலுத் தும் வகையில், தமிழ்நாடு காங் கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் அய்.ஸ்டீ பன் தலைமையில், சென்னை சாந் தோமில் உள்ள சிஎஸ்அய் புனித தோமா தமிழ் ஆலயம் அருகில் மெழுகுவத்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (30.7.2023) நடை பெற்றது.

இதில் ஆலயத்தின் போதகர் சைலஸ் ஞானதாஸ், செயலர் ஜெப நாத் கோயில்பிள்ளை, பொருளா ளர் சாமுவேல் சாமிக்கண்ணு மற் றும் ஆலய வழிபாட்டுக்கு வந்தி ருந்த நூற்றுக்கணக்கானோர் பங் கேற்று மெழுகுவத்தி ஏந்தி இரங் கலும் நினைவேந்தலும் செலுத் தினர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் ஐ.ஸ்டீபன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``மணிப்பூர் மாநில கலவரத்தில்400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பழங்குடியின பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துள் ளனர். இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தியும், இறந் தவர்களுக்கு இரங்கல் செலுத்தும் விதமாகவும், மெழுகுவத்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது'' என்றார்.

No comments:

Post a Comment