அவதூறு:சிதம்பரத்தில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டு பூணூல் அறுக்கப்பட்டதாக அவதூறு செய்தி பரப்பிய பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

அவதூறு:சிதம்பரத்தில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டு பூணூல் அறுக்கப்பட்டதாக அவதூறு செய்தி பரப்பிய பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு

 சிதம்பரம், ஜூலை 3 -  தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள ரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் பிணை பெற்று அவர் வெளியே வந்தார். இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் தகவலை தனது சமூக வலைதளத்தில் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அற நிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீட்சிதர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக போலி செய்தியை பரப்பி சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த கவுசிக் சுப்ரமணியன் என்பவருக்கு சிதம்பரம் காவல் துறையினர் அழைப்பாணை அளித் துள்ள நிலையில், பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அழைப்பாணை அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment