'நெக்ஸ்ட்' தேர்வுக்கு எதிர்ப்பு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

'நெக்ஸ்ட்' தேர்வுக்கு எதிர்ப்பு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 12-  'நெக்ஸ்ட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளி நாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகிய வற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்ட மிட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் நெக்ஸ்ட்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும். அதன்பின், நெக்ஸ்ட்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும்.  இத்தேர்வு, வெளிநாடுகளில் மருத்து வம் படித்தவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘நெக்ஸ்ட்’ தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத் துவ மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று (11.7.2023) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘நெக்ஸ்ட்’ தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்க மிட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment