அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

 அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர்கள் எ.வ.வேலு - மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்

ஆவடி, ஜூலை 30 ஆவடி அருகே அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நூற் றாண்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விழா மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.கணபதி, அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் அ.ம.துரைவீரமணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மா.சுப்பிர மணியன் ஆகியோர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் அண்ணா சாலை வரை ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் வடி கால் மற்றும் தார் சாலை அமைக் கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.54 லட்சத்தில் கட் டப்பட்ட கூடுதல் கட்டடத்தை மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு   திறந்து வைத் தார். பின்னர் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் கேடயம், விலையில்லா மிதி வண்டி ஆகியவற்றை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மேலும் நல்லாசிரியர் களுக்கு விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச் சியில் மாவட்ட துணை ஆட்சியர் சுக புத்திரா, முதன்மைக்கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment