தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணி, சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் - ரூபாய் 6,034 கோடி ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணி, சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் - ரூபாய் 6,034 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 12- தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட 1,772 பணிக ளுக்கு ரூ.6,034 கோடி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலைத்துறை அர சாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் சாலை விரிவாக்கம், பரா மரிப்பு, பாலங்கள் கட்டுதல் உள் ளிட்ட 1,772 பணிகளுக்கு ரூ.6,034 கோடி நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப் புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அர சாணை பிறப்பித்துள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது:

சட்டப்பேரவையில் 2023_2024ஆ-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்பு களை அமைச்சர் வெளியிட்டார். முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடப்பாண்டு 13.30 கி.மீ. ஈரோடு வெளிவட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட 200 கி.மீ. சாலை கள், 4 வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் இரு வழித்தடமாகவும் அகலப்படுத்தப்படும். நெடுஞ்சாலைகளில் விபத்து தடுப்புக்காக ரூ.150 கோடியில் சாலை பாதுகாப் புப் பணி, மலைப்பகுதி கொண்டை ஊசிவளைவுகள், ஆபத்தான வளை வுகளில் உருளை விபத்து தடுப்பான்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்படும். 273 தரைப்பாலங்கள் ரூ.787 கோடி யில் கட்டப்படும்.

சென்னையில் நிரந்தர வெள் ளத்தடுப்புக்கு ரூ.116 கோடியில் சிறுபாலங்கள், கால்வாய்கள் கட் டப்படும். மாநில நெடுஞ்சாலை களில் நில எல்லை அளவு மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் விவரங்கள் கணினி மயமாக்கப் படும். 9 மாவட்டங்களில் 12 ஆற் றுப்பாலங்கள் ரூ.215.80 கோடியில் கட்டப்படும். துறையூர், திருப்பத் தூர், நாமக்கல் நகரங்களுக்கு ரூ.286 கோடியில் புறவழிச்சாலை கள் அமைக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட் டத்தில் சட்டப்பேரவை உறுப் பினர்களிடம் பெறப்பட்ட கோரிக் கைகளை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.1,093கோடி மதிப்பில் பணிகள் செயல்படுத்தப்படும் என் பன உள்ளிட்டவற்றை அறிவித் திருந்தார்.

இத்திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த சாலை கட்ட மைப்பு மேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் மொத்தம் 1,772 பணி களுக்கு ரூ.6,033.93 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு, நிதி ஒதுக் கும்படி அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு பணிக்கு ஆகும் செலவு களை கணக்கிட்டு, ரூ.6,033.93 கோடி ஒதுக்குவதற்கான நிர்வாக ஆணையை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment