சிவசேனாவின் 54 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் தகுதி நீக்க தாக்கீது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

சிவசேனாவின் 54 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் தகுதி நீக்க தாக்கீது!

மும்பை, ஜூலை 9 - மகாராட்டிரா மாநிலத்தில் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று, உத் தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத்  ஷிண்டே ஆகிய இரண்டு தரப்புமே தாக்கீது அளித்துள்ளன. மேலும், தங்களின் உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பியுள்ளன. அதனடிப்படையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அவ ரது அணியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உத்தவ் தாக்கரே அணியின் 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மகாராட்டிரா பேரவைத் தலைவர் ராகுல்  நர் வேகர் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பி உள்ளார். 

ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம்  செய்ய பேரவைத் தலைவர் ராகுல்  நர்வேகாரிடம் கடிதம் வழங்கி  இருந்தார். அதேபோல் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக் கரே அணியின் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய  கடிதம் வழங்கியது. எனினும்  இந்தக் கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் நர்வேகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

இதையடுத்து உத்தவ்  தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனகூறியிருந்தது.உச்ச நீதிமன்றமும்,பேரவைத் தலைவர் விரைவில் நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவிட்டு இருந் தது. 

இந்நிலையில்தான் தகுதி நீக்க நடவடிக்கை யின் முதல்கட்டமாக மகாராட்டிரா பேரவைத் தலைவர் ராகுல்  நர்வேகர், அடுத்த7 நாள் களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இரண்டு அணி களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளார். “தகுதி நீக்க நடவடிக்கையின் தொடக்கமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 சட்டமன்ற உறுப் பினர்களுக்கும், உத்தவ் தாக் கரே அணியின்  14 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது’’ என நர் வேகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment