கடலூர் மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு 45 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

கடலூர் மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு 45 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு

கடலூர், ஜூலை 16 - கடலூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.07.2023 அன்று நண்பகல் 12 மணியளவில் கடலூர் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை கட்டடத்தில்  நடைபெற்றது

கடலூர் மாநகர செய லாளர் இரா. சின்னதுரை அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்

கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை சந்திரசேகன் தலைமை வகித்து கழக செயல்பாடு கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் செய்ய வேண் டிய களப்பணிகள் குறித்து விளக்க  உரையாற்றினார்

மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சொ. தண்டபாணி, சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பூசி. இளங்கோவன், மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி. மாவட்ட அமைப்பாளர் சி. மணி வேல். மாவட்ட இணைச் செயலாளர் நா. பஞ்சமூ மூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்.

கழக மாநில ஒருங்கி ணைப்பாளர்  இரா.ஜெயக்குமார் கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி யும் மாநகராட்சி பகுதி கழகங்களை  தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக் கம் அதன் இறுதிஇலக்கு அதனால் ஏற்படும் பயன் கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பு,  குறித் தும் உரை நிகழ்த்தினார்

ஒன்றிய தலைவர் கந்த சாமி, மாவட்ட இளைஞ ரணி தலைவர் உதயசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு ,சிதம்பரம் மாவட்ட அமைப்பாளர் தென்னவன், மாதவன் செந்தில்வேல், கனகராஜ் ,தமிழரசன் சேகர் மகளிர் அணி தோழியர் முனியம் மாள் வடலூர் நகர தலை வர் புலவர் ராவணன் ,ரமேஷ் மணிவண்ணன் ரவிச்சந்திரன், தங்க. சுதா கர் க.சேகர் கண்ணன், தமிழரசன் பெரியார் பெருந்தொண்டர் சுந்தர மூர்த்தி, கடலூர் தர்மன் ,வேணுகோபால், பீமராவ் ராம்ஜி, மாவட்ட ப.க.தலைவர் அருணா சலம், திராவிடன் உள் ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்

கடலூர் மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப் பாளர்களை  கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அறிவித்தார்

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

06.07.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடை பெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தெருமுனை கூட்டங் களை கடலூர் மாநகராட் சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்துவது என முடிவு செய்யப்படு கிறது.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் 2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி மிக சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படு கிறது புதிய இளைஞர்கள் மாணவர்களை பெருமளவில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது

கடலூர் மாநகராட்சி பகுதிகளில் முடிவடைந்த விடுதலை சந்தாவை புதுப்பித்து புதிய சந் தாக்களை சேர்த்து வழங் குவது என முடிவு செய் யப்படுகிறது.

கடலூர் மாநகராட்சி களின் வார்டுகளில் கீழ் கண்டவாறு பகுதி கழகங் களை பிரித்து புதிய அமைப்புகள் அமைக்கப் படுகிறது. கீழ்கண்டவர் கள் பகுதி கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment