இந்தியாவில் 30 சதவீத மருந்து தேவைகளை தென் மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

இந்தியாவில் 30 சதவீத மருந்து தேவைகளை தென் மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன

சென்னை, ஜூலை 16 - ''இந்தியாவின் 30 சதவீத மருந்து தேவைகளை தென் மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன'' என, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்க தென்மாநில பிரிவு தலைவர் ஜெயசீலன் கூறினார்.

சென்னை வர்த்தக மய்யத்தில், அய்.டி.எம்.ஏ., என்ற இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு நடத்தும், 'பார்மா சவுத் எக்ஸ்போ' இரண்டு நாள் கண்காட்சி 14,7.2023 அன்று துவங்கியது.

200 அரங்குகள்:  இதில், மருந்து உற்பத்தி மற்றும் தயாரிப்பு சாதன நிறுவனங்கள், 170க்கும் மேற்பட்ட அரங்கங்களை அமைத்துள்ளன. இந்த கண்காட்சியை சிறு, குறு, நடுத்தர மருந்து தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண் ராய் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அய்.டி.எம்.ஏ.,வின் தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி பிரிவு தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:

சென்னையில் எட்டா வது, 'பார்மா சவுத் எக்ஸ்போ' நடைபெறுகிறது. ஆரம் பத்தில் 50 அரங்குகள் இருந்த நிலையில், தற்போது 170க்கும் மேல் உள்ளன. அடுத் தடுத்த ஆண்டுகளில் 200 அரங்குகளுக்கு மேல் இடம்பெறும்.

இந்தியாவின் மொத்த மருந்து தேவை யில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள்தான், 30 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநர் சிறீதர் கூறியதாவது: தமிழ்நாட்டில், இதயம், சர்க்கரை நோய், மன அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு பாதுகாப்பான மருந் துகள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்து வருகிறது. 

மேலும், பல் வேறு விதமான புதிய மருந்துகள் கண்டுபிடிப்பிலும், ஆராய்ச்சிகளை முன்னெ டுப்பதற்கான கட்டமைப்புகளையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகள் சிகிச்சை பெறுவது முதல் வீடு திரும்பும் வரை மருந்துகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

 ஒன்றிய, மாநில அரசுகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டு மருந்து நிறுவனங்கள் சிறப் பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment