2 ஆண்டு தண்டனை தடைவிதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

2 ஆண்டு தண்டனை தடைவிதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு

 அகமதாபாத், ஜூலை 7  கடந்த 2019-இல் கருநாட காவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?" என்று விமர்சித்தார். 

இது தொடர்பாக குஜராத் பாஜக சட்டமன்ற உறுப் பினர் பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறைத் தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, "ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை காரணமாக, அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ராகுல் காந்திக்கும், அவரைத் தேர்வு செய்த நாடாளுமன்ற தொகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று வாதிடப் பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் இன்று (7.7.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ஷெசன் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்து மார்ச் 23ஆம் தேதி வழங்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். 


No comments:

Post a Comment