பகுத்தறிவு - சமூகநீதி தென் அமெரிக்க பழங்குடியினத் தலைவர் சைமன் பொலீவர் (24.7.1783-17.12.1830) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

பகுத்தறிவு - சமூகநீதி தென் அமெரிக்க பழங்குடியினத் தலைவர் சைமன் பொலீவர் (24.7.1783-17.12.1830)

பகுத்தறிவு, சமூகநீதி, தனிமனித ஒழுக்கத்தைப் போதித்து தென் அமெரிக்க பழங்குடியினரை விடுதலைப்பாதைக்கு கொண்டுவந்த சைமன் பொலீவர் பிறந்த நாள் இன்று:

 இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்று தென் அமெரிக்கா வில் சைமன் பொலீவர் அய் ரோப்பிய காலனி ஆதிக்கத் தின் பிடியில் இருந்த அமெரிக்க மண்ணின் மைந்தர்களுக்கு சுய மரியாதையை ஊட்டி, பகுத்தறிவு, சமூகநீதி உள்ளிட் டவற்றை எடுத்துக்கூறி மக்களை ஆதிக்கவெறியர் களுக்கு எதிராக போராடவைத்ததுடன் தானே போராட் டத்திற்கு தலைமைதாங்கி வழிநடத்தினார்.   இவர் ஒட்டுமொத்த அமெரிக்க பழங்குடியினரின் உரிமைக் காகப் போராடினார். இவரின் போராட்டத்தால் 6 நாடுகள் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. 

தற்போதைய வெனிசுலாவில் மிகப்பெரும் செல் வந்தக் குடும்பத்தில் பிறந்தவர், இவரது படிப்புகள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டில் தான் முடிந்தது. அங்குதான் ஆண்டான் அடிமை முறையைப் புரிந்து கண்டார்.  குழந்தைப் பருவத்திலேயே தாயார் இறந்து விட்டதால் அப்போதைய காலகட்டத்தில் வீட்டில் அடிமையாக இருந்த சிமோன் ஹிப்போலிட்டா என்ற கருப்பினப் பெண்மணியால் வளர்க்கப்பட்டார்.   இதனால் ஒடுக்கப்பட்டோர் மீதான அவரது பார்வை சமூக அக்கறையாக மாறியது. அடிமை முறையை அகற்ற நினைத்த அவர் தான் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தாலும் இம்மண்ணின் மைந்தர்களிடம் பிழைக்க வந்த ஸ்பானிய காலனி ஆதிக்கவாதிகளிடம் நம் மக்கள் அடிமைகளாக இருப்பதை உணராமல் இருக்கின்ற னர் என்று உணர்ந்து ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க போராட்டக் களத்தில் இறங்கினார். 

மாட மாளிகையில் தங்கக் குவளையில் உண வருந்திய சைமன் பொலீவர் அடித்தட்டு மக்களோடு மூங்கில் குவளையில் உணவருந்தினார். அம்பேத்கர், பெரியாரைப் போன்றே பழங்குடியின மக்களுக்கு சுய மரியாதை உணர்வை, நாடு நாடாக சென்று உணர்த் தினார். அவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையும் கருப்பின அடிமைகளும்  - பழங்குடியினரும் ஸ்பானிய காலனி ஆதிக்கவாதிகளுக்கு ஒன்றுதான் என்பதை உணர்த்தினார். அனைவரும் சமம்  - இங்கு யாரும் ஆண்டான் அடிமை இல்லை என்று முழங் கினார்.    அமெரிக்க கடற்படையில் சேர்ந்து போர்ப் பயிற்சி பெற்ற பிறகு வெனிசுலாவிற்கு திரும்பி மக்களை ஒன்று திரட்டி ஸ்பானிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடத் துவங் கினார். வெனிசுலேவியன் காங்கிரஸ் கட்சியைத் துவங்கி சோசலிச கொள்கைகளாக கட்சியின் அடிப் படைக் கொள்கையாக உருவாக்கினார். 

 கைதி, பொலிவியா, கயானா, கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு ஸ்பானிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றுத்தந்தார். அங்கு எல்லாம் அடிமை முறையை அகற்ற உறுதி அளித்து ஆட்சிப்பொறுப்பை அம்மக்களி டமே வழங்கினார். இவர் சுதந்திரம் வாங்கித்தந்த ஜமைக்கா நாட்டின் தலைவரையே ஸ்பானியர்கள் பெருந் தொகை கொடுத்து தங்களுக்கு ஆதரவாளராக திசைதிருப்பி பொலீவரைக் கொலை செய்ய முயற்சித்த னர். ஆனால் இதில் பொலீவரின் உதவியாளர் கொல்லப் பட பொலீவர் அங்கிருந்து தப்பினார்.  பின்னர் ஜமைக்கா வில் மன்னராட் சியை ஒழித்து ஜனநாயகத்தை மலரச் செய்தார். 

 நெப்போலியனின் படையெடுப்பால் ஸ்பானியர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட - இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பானியர் களிடமிருந்து அனைத்து அதிகாரங்களையும் மக்க ளுக்குப் பெற்றுத்தந்தார். அவரது புரட்சிப் பயணம் 30 ஆண்டுகள் தொடர்ந்தது. 

 இறுதியாக தன்னுடைய 47 ஆவது வயதில் உடல் நிலை மோசமானதால் தன்னுடைய செல்வம் அனைத் தையும் மக்களுக்காக ஒப்படைத்துவிட்டு கொலம்பியா வில் உள்ள சாண்டா மர்டா கடற்கரையில் ஸ்பானிய மீனவர் ஒருவரின் வீட்டில் மரணமடைந்தார். இறுதி நாளில் அவரது ஆடைகள்கூட ஸ்பானியர் ஒருவரால் கடனாக கொடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment