மாணவ - மாணவிகளுக்கு ரூபாய் 236 கோடியில் விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

மாணவ - மாணவிகளுக்கு ரூபாய் 236 கோடியில் விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பு

சென்னை, ஜூலை 11 - ரூ.236 கோடியில் 4.89 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங் கும் திட்டத்தை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் சிரமமின்றி பள் ளிக்கு செல்லும் வகையில் தமிழ் நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒவ்வொருகல்வியாண்டும் இலவசமாக மிதிவண்டி வழங்கப் பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த கல்வி யாண்டில் (2022-_2023) பிளஸ்-1 படித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா சென்னை, திருவல் லிக்கேணி என்.கே.டி தேசிய பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (10.7.2023) நடந்தது.

இந்த விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கலந்து கொண்டு, ரூ.235.92 கோடி மதிப்பீட்டில், 4 லட்சத்து 89,600 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அடையாளமாக 10 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகளை நேரடியாக வழங்கினார். நிகழ்ச்சி யில் அவர் பேசுகையில், “இதனை இலவசமாக பார்க்காமல் கற்ற கல் விக்கு உரிமையாக பார்க்க வேண் டும். கல்வியை மட்டும்தான் யாரா லும் எடுத்துக் கொள்ள முடியாது. மாணவர்களுக்கு ஒரு தாயாகவும், தந்தையாகவும் பார்த்துக் கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார்” என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் இலவசமாக பெறும் மிதிவண்டிகளை மாணவ, மாணவியர் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். மகளிர் உரிமை திட்டம் 80 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப் பில்லை என பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை குறிப்பிட்டி ருந்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறியிருந்தனர். ஆனால்ரூ.15 ஆவது கொடுத்தார்களா? அவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்து பேச அருகதை இல்லை” என்றார்.

இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிறு பான்மையினர் நலத்துறை அமைச் சர் செஞ்சி மஸ்தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாநக ராட்சி மேயர் ஆர்.பிரியா, பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment