கங்கை மாதாவின் கருணை யோ கருணை கங்கை நதி தூய்மைப் பணியில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

கங்கை மாதாவின் கருணை யோ கருணை கங்கை நதி தூய்மைப் பணியில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு

டேராடூன், ஜூலை 20 உத்தராகண்ட் மாநிலத்தில் மின்மாற்றி  (டிரான்ஸ்பார்மர்)  வெடித் ததில் 16 பேர் உயிரிழந்தனர். 

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், அலக்நந்தா ஆற்றங்கரையில் நாம்னே கங்கே நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியில் அமைக் கப்பட்டு இருந்த மின்சார மின் மாற்றி  நேற்று (19.7.2023) திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டு இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. 

இந்நிகழ்வில் 16 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த 6 பேர் மீட் கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்திவருகின்றனர். இந்நிகழ்வு பற்றி தகவல் அறிந்ததும் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உடனடியாக காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதலை அவர் தெரிவித்துள்ளார். நிகழ்வு தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்விடத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment