புதுமைப் பெண் திட்டம்: மாணவிகளுக்கு ரூபாய் 161 கோடி வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

புதுமைப் பெண் திட்டம்: மாணவிகளுக்கு ரூபாய் 161 கோடி வழங்கல்

சென்னை, ஜூலை 30  புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரண மாக 12ஆ-ம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.இத்திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை யின் மூலம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத் தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக் கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட் டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டு களுக்கான படிப்புக்கு இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்துக்கென புதிய மறு சீரமைக்கப்பட்ட வலைதளம் (https://www.pudhumaipenn.tn.gov.in)உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரி யின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி ‘புதுமைப் பெண் திட்டம்’ முதலமைச்சரால் 2022-ஆம் ஆண்டு செப்.5ஆ-ம் தேதி முதல் கட்டமாகவும், கடந்த பிப்.8ஆ-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தொடங்கிவைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022_-2023ஆ-ம் நிதியாண்டில் முதற் கட்டமாக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் 1.16,260 மாணவி களும், இரண்டாம் கட்டமாக 93,105 மாணவிகளும் பயனடைந்த வகையில் ரூ.100.11 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் 2023-_2024ஆ-ம் நிதியாண்டுக்கு ரூ.349.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.60.86 கோடி செலவினம் மேற் கொள்ளப்பட்டதில் 2,11,506 மாணவிகள் பயனடைந்து வருகின் றனர். இத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை இத்திட்டத்துக்கென ரூ.160.97 கோடி பணப்பலனாக மாண விகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ் வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment