மழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: உயிரிழப்பு 16 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

மழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: உயிரிழப்பு 16

புதுடில்லி, ஜூலை 10 - டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று (9.7.2023) ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில், பருவ மழை தற்போது தீவிரமடைந்து டில்லி, மகாராட்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் உள் ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

தலைநகர் டில்லியில் கடந்த 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. அதன் பிறகு டில்லியில் நேற்று ஒரே நாளில் 15.3 செ.மீ. மழை பெய்துள்ளது. 41 ஆண்டு களுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். டில்லியின் முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனையில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. வர்த்தக நிறுவனங்கள், குடி யிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வரலாறு காணாத மழையால் டில்லி அரசு ஊழியர்களின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நேற்று ரத்து செய்யப்பட்டது. அனைத்து அரசு ஊழியர்களும் மீட்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட் டனர். ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஸ்கனா நதியை கடக்க முயன்ற ராணுவ வீரர்கள் தெலு ராம், குல்தீப் சிங் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. தோடா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கி யதில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.

நிலச் சரிவுகளால்...

ஜம்மு_-சிறிநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் சுமார் 3,000 வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ஜீலம் நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. மலைப் பிரதேச மான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட் டுள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 9 இடங்களில் காட்டாற்று வெள்ளத் தில் வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டன.

சிம்லாவில் வீடு இடிந்து ஒரே குடும் பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். குலு, சம்பா பகுதிகளில் ஏற்பட்ட நிலச் சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். இமாச் சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதி களில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கனமழை தொடர் வதால் இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடு முறை விடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில்...

உத்தரப் பிரதேசத்தில் தலைநகர் லக்னோ உட்பட 39 நகரங்கள் வெள்ளத் தால் சூழப்பட்டு உள்ளன. முஸாபர்நகர் பகுதியில் வீடு இடிந்து, தாய், மகள் உயிரிழந்தனர். மெயின்புரி பகுதியில் மின்னல் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர். மொரதாபாத் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன. அப்பகுதிகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடு களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

உத்தராகண்ட்டில்...

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு 11 பக்தர்கள் வாகனத்தில் சென்று கொண் டிருந்தனர். அவர்களது வாகனம் தெஹ்ரி கார்வால் பகுதியில் சென்ற போது நிலச்சரிவில் சிக்கியது. இதன் காரணமாக கங்கை நதியில் வாகனம் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 5 பேர் மீட்கப்பட்டனர். 3 பேரின் சட லங்கள் மீட்கப்பட்டன. 3 பேரை காண வில்லை.

அவர்களை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் 5 பேர், காஷ்மீரில் 4 பேர், உத்தர பிர தேசத்தில் 4 பேர், உத்தராகண்டில் 3 பேர் என ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசத்தில்...

மத்தியப் பிரதேசத்தின் மொத்தம் உள்ள 53 மாவட்டங்களில் 27 மாவட் டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

அரியாணாவில் சண்டிகர் உள் ளிட்ட 55 நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாபின் மொகாலி நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராட்டிரா, கோவா, குஜராத், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கன மழையால் வட மாநிலங்களில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட் டுள்ளன. 

No comments:

Post a Comment