மோடி கூறிய ரூ.15 லட்சம் எங்கே? பஞ்சாப் முதலமைச்சரும் மோடியை நோக்கி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

மோடி கூறிய ரூ.15 லட்சம் எங்கே? பஞ்சாப் முதலமைச்சரும் மோடியை நோக்கி கேள்வி

சண்டிகர், ஜூலை 11 -  பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு வழங்கும் கட்டணமில்லா மின்சாரம் தொடர்பாக பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் கூறும் போது, "நாங்கள் மக்கள் முன் வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரு கிறோம். ஆனால் மோடி 9 ஆண்டு களுக்கு முன்பு அறிவித்த ரூ.15 லட்சம் வந்ததா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டில்லி, பஞ்சாப்பை தொடர்ந்து அரியானாவிலும் தனது தளத்தை விரிவுப் படுத்தும் வேலையில் களம் இறங்கி யுள்ளது. அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின்  பிரச்சாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால்  தொடங்கி வைத்தார்.

பஞ்ச்குலாவில் நடைபெற்ற கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவா லுடன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானும் பங்கேற்றார். 

ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் பேசுகையில் கூறியதாவது:

சுதந்திரம் பெற்று பல ஆண்டு களுக்குப் பிறகும் மின் வெட்டு ஏற்பட்டால், நம்மால் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால் அது வெட்கக் கேடானது. இதன் பொருள் உள்நோக்கம் (மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம்) இல்லாதது என்பதே!

பஞ்சாபில் 90 சதவீத வீடுகள் கடந்த ஒரு ஆண்டாக பூஜ்ஜிய மின் கட்டணத்தைப் பெறுகின்றன. எங்கள் நோக்கம் சுத்தமாக இருப் பதால் இது சாத்தியமானது.

பா.ஜ.க.வினர் இரட்டை என் ஜின் பற்றி பேசுகிறார்கள், உங்க ளுக்கு லேட்டஸ்ட் என்ஜின் தேவை என்று நான் சொல்கிறேன்.

நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் (பஞ்சாபில்) கொடுக்கும் போது, அவர்கள் பகவந்த் சிங் மான் இலவசங்கள் கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள். குறைந்த பட்சம் இவை (இலவச மின்சாரம்) மக்களை சென்றடைகின்றன, அவர்களின் ரூ.15 லட்சம் வாக் குறுதி என்னாயிற்று?. இவ்வாறு அவர் கூறினார்.

9.7.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை தேர்தல் அறிக் கையில் கொடுத்துவிட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். 

ஆனால், 2014ஆம் ஆண்டு மோடி கூறிய அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு அனைத்து மக்களுக்கும் ரூ.15 லட்சம் வழங் குவோம் என்ற உறுதி மொழி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார். தற்போது பஞ்சாப் முதலமைச்சரும் அதே கேள்வியை எழுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment