மாநிலங்களவைக்கு 11 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

மாநிலங்களவைக்கு 11 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு

புதுடில்லி,ஜூலை19 - கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.

இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான தேர்தல் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இவர்களில் ஒன்றிய அமைச்ச ரான சுப்ரமணியம் ஜெய்சங்கர் கிருஷ்ணசுவாமி ஆகஸ்டு 18ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, ஒன் றிய வெளி விவகார அமைச்சரான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். காலியாக வுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வ தற்கு ஜூலை 13ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்தலுக் கான வாக்கு எண் ணிக்கை வருகிற ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங் கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற் றில் மேற்கு வங்கா ளத்தில் 6 இடங்கள், குஜராத்தில் 3 இடங்கள் மற்றும் கோவாவில் ஓர் இடத்தில் வாக்கெடுப்பு எதுவும் நடை பெறாது. ஏனெனில், இந்த இடங்களில் போட்டி வேட்பா ளர்கள் யாரும் இல்லை. பா.ஜ.க.வில் 5 வேட்பாளர்கள், திரிணாமுல் காங்கி ரசில் 6 வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

அவர்களில் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment