கலைஞர் கோட்டம் திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

கலைஞர் கோட்டம் திறப்பு விழா

திரூவாரூர், ஜூன் 21 - திருவாரூர்  “கலைஞர் கோட்டம்" திறப்பு விழா நேற்று (20.6.2023) காலை 9 மணியளவில் திருவாரூர் சகோதரிகளின் இசைநிகழ்ச்சியுடன் தொடங்கியது.

கவியரங்கம் - பட்டிமன்றம் - பாட்டரங்கம்!

அதனைத் தொடர்ந்து - கவிப் பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் - கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவி பாடினர்.

கவியரங்கை அடுத்து தமிழறி ஞர் சாலமன் பாப்பையா அவர் களை நடுவராகக் கொண்டு, பட்டி மன்றம் நடைபெற்றது. “மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத் தமிழறிஞர் கலைஞரின் பேச்சே! - எழுத்தே!” எனும் தலைப்பிலான இப்பட்டிமன்றத்தில் - “பேச்சே!” எனும் தலைப்பில் திருவாரூர் புலவர் சண்முகவடிவேல், கவிதா ஜவகர், எஸ்.ராஜா ஆகியோரும், “எழுத்தே!” எனும் தலைப்பில், புலவர் எம்.ராமலிங்கம், இரா.மாது, பாரதி பாஸ்கர் ஆகியோரும் வாதிட்டனர்.

பட்டிமன்றத்தை அடுத்து கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் நடை பெற்றது. பாட்டரங்கினைத் தொடர்ந்து, விழாவில் - தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர் வாக அறங்காவலர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வரவேற்பு ரையாற்றினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை - முத்துவேலர் நூலகம் திறப்பு!

தி.மு.கழகத் தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் சிலையைத் திறந்து வைத்து, விழாத் தலைமையுரையாற்றினார்.

கலைஞர் கோட்டம் திறப்பு!

வாத்திய இசை முழக்கத்துடன் “கலைஞர் கோட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், செல்வி செல்வம் ஆகியோர் நேற்று (20.6.2023) திறந்து வைத்தனர்.

அருங்காட்சியகம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியினர் கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட்ட னர்! இதனைத் தொடர்ந்து கலை ஞர் கோட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முன் னணியினர் பார்வையிட்டனர்.

பீகார் மாநில துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவ், "முத்து வேலர் நூலகத்தை” திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தயாளு அம்மாள் அறக்கட்டளையின் அறங் காவலர் சம்பத்குமார் நன்றியுரை யாற்றினார்.

இவ்விழாவில் பீகார் மாநில நீர்வளத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச் சர் சஞ்சய்குமார் ஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் மக்க ளவை உறுப்பினர் தொல்.திரு மாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்க ளவை திமுக குழுத் தலைவர் திருச்சி என்.சிவா, துரைமுருகன்,  எ.வ.வேலு, உதயநிதிஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள்,  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், துர்காஸ்டாலின், செல்வி செல்வம் மற்றும் நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டனர். தமிழ்கூறு நல்லுலகினர் அனைவரும் விழா விற்கு வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment