விஜய கரிசல்குளம் அகழாய்வில் பழங்கால செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

விஜய கரிசல்குளம் அகழாய்வில் பழங்கால செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

விருதுநகர் ஜூன் 15 - விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. பண்டைய காலத்தில் பயன்படுத்திய எடை கற்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல் உள்பட 1,970 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 தற்போது 36 செ.மீ. நீளம், அகலம் 16 செ.மீ.தடிமன், 6 செ.மீ. உள்ள முழுமையான செங்கல் கிடைத்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் செங்கலை விட நீளம் மற்றும் அகலம் கூடுதலாக உள்ளது. இதன்மூலம் பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் செங்கல் வைத்து கட்டடங்கள் கட்டி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. தற்போது செங்கல், மண்பாண்ட ஓடுகள், கருங்கற்கள், மட்டுமே தொடர்ந்து கிடைத்து வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment