மிகப் பெரும் ராஜதந்திரி "கலைஞர்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

மிகப் பெரும் ராஜதந்திரி "கலைஞர்"

காந்தியார் பேரன் மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி புகழாரம்

சென்னை, ஜூன் 3 நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர்

 

என காந்தியாரின்  பேரனும் மேற்கு வங்க மேனாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.  மறைந்த திமுக தலை வரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது 100-ஆவது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. 

இதனையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில், கலைஞர்   நூற்றாண்டு விழா ஒளிப்பட கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியாரின் பேரனும், மேற்குவங்க மேனாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டார்.  

விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது:- "அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கலைஞர். எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கலைஞர் எழுதினார். நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர். இன்றைய இளம் அமைச்சர்களுக்கும், அவருடைய பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கும் சொல்ல விரும்புகிறேன்.  நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கலைஞர் சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை. பேரன்களுக்கு பெயருண்டு அந்த பெயரை காப்பாற்றுவது பெரிய வேலை. நான் ஒரு சாதாரண மனிதன். அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின்". இவ்வாறு அவர் உரையாற்றினர்.


No comments:

Post a Comment