தென்காசி மாவட்டத்தில் தோழர்கள் சந்திப்பு - குற்றாலம் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திட முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

தென்காசி மாவட்டத்தில் தோழர்கள் சந்திப்பு - குற்றாலம் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திட முடிவு!

சங்கரன்கோயில், ஜூன் 5 - குற்றாலத்தில் சூன்-28,29,30,சூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு வருகைதரும் தமிழர்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தென்காசி மாவட்ட கலந்துரை யாடலில் உறுதி செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர், பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துறவாடும் சுற்றுப் பயணம் 29.5.2023 அன்று எழுச்சியோடு நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் த.வீரன் தலைமையில், திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் சு.இனியன், ஆண்டிப் பட்டி செந்தில் குமார், தஞ்சை முனைவர் கி.சவுந்தரராசன் முன்னி லையில் காலை ஏழு முப்பது மணிக்கு சங்கரன்கோயிலில் தொடங்கிய இப்பயணம் இரவு 9 மணிக்கு இராயகிரியில் முடி வடைந்து.

சங்கரன் கோயில்  சங்கர லிங்கம்(எ) கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பெரி யார் பற்றாளர் பா.சதாசிவம், இராம கிருஷ்ணன், ச.நாராயணன் ஆகி யோர் வரவேற்றனர். 

‘விடுதலை’யின் பயன்பாடு களை யும், தமிழர் தலைவரின் அணுகுமுறை களைப் பற்றியும் வியந்து கூறினார்கள். தொடர்ந்து வழக்குரைஞர் து.சண்முகையா அலுவலகத்தில் கலந்துரை யாடல் நடைபெற்றது 

40 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமது சொந்த ஊருக்கு அழைத்து இல்லத் திறப்பு விழா நடத்தியதை குறித்துப் பேசிய சண்முகையா, “கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறேன் . சங்கரன்கோவில் நகர அமைப்பினை உருவாக்கு வோம்“ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

தொடர்ந்து ஊத்துமலையில் பகுத்தறிவாளர் செ.சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்ற சீ .செங்கதிர் வள்ளுவன் திராவிட மாணவர் கழகத்தில்  தன்னை இணைத்துக் கொள்வ தாகத் தெரிவித்தார்.

வி.கே.புதூரில்...

தொடர்ந்து வி.கே. புதூரில் பகுத்தறிவாளர் பு.முத்துக்குமார், மா.அருண் ஆகியோரை சந்தித்த போது விரைவில் ஊத்து மலையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அடுத்து பகுத்தறிவாளர்  பங்களா சுரண்டை மா.ஆறுமுகம் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

அவர், தமிழர் தலைவரின் தொண்டினை உணர்வுபூர்வமாக  எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார். 

சுரண்டையில் மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளரும், நகர தி.மு.க. செயலாளருமாகிய சே.செயபாலன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சேசு ராஜன் ஆகியோரை கலை ஞர்அறிவாலயத்தில் பயணக் குழு வினர் சந்தித்தனர். 

வருகை தந்த புதிய பொறுப் பாளர்களுக்கு  பயனாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.

தந்தை பெரியார் சிலையினை விரைவில் திறந்திட ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், 31 இடங்களில் கழகக் கொடியினை ஏற்றுவோம் எனவும் உறுதி கூறினார்  புதிய வெளியீடுகள் “பெரியாரை எப்படி புரிந்து கொள்வது?”, “ஆசிரியர் கி.வீரமணி 90”  ஆகிய இரு நூல்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் ஆலங்குளம் ஆ.ஞானராஜ் குடும் பத்தினரை சந்தித்தபோது ஆலங் குளத்தில் நகர திராவிடர் கழக அமைப்பினை உருவாக்குவோம் என்றதோடு விரைவில் தந்தை பெரியார் சிலை வைக்க முயற்சித்து வருகிறோம் என தெரிவித்தனர்..

மேலமெய்ஞ்ஞானபுரம்

மேலமெய்ஞ்ஞானபுரத்தில் காப்பாளர் டேவிட் செல்லதுரை இல்லத்தில் மகளிர் அணி பொறுப் பாளர் சாந்தி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் 

சு.இனியன் ஆகியோருடன் கலந் துரையாடல் நடைபெற்றது.

தமிழர் தலைவரது ஓய்வறியா உழைப்பினை உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்து, குற்றாலம் பெரியா ரியல் பயிற்சி முகாமினை மிக சிறப்பாக நடத்துவோம் என தெரிவித்தார் .

கீழப்பாவூரில் பொதுக் குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் இல்லத் தில் குடும்பத்தினரை குழுவினர் சந்தித்தபோது, மிகுந்த மகிழ்ச்சி யோடு வரவேற்ற மகளிர் அணி பொறுப்பாளர் சீலா தேவி தமிழர் தலைவரது தொண்டினைப் போற் றினார். 

தொடர்ந்து பொட்டல் புதூரில் கொ.சிவசுப்பிரமணியம் குடும்பத்தினர் தமது மகள் முத்து லெட்சுமி பெரியார் திடலில் பணியாற்றுவது மிகுந்த பெருமை யாகவுள்ளது எனக் கூறி மகிழ்ந் தார்கள் .

தொடர்ந்து வடகரையில் இளைஞர் அணி பொறுப்பாளர் கை .சண்முகம் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது விரைவில் வடகரையில் பொதுக்கூட்டம் நடத்துவது என உறுதி கூறினார்.

இராயகிரியில்...

தொடர்ந்து இராயகிரியில் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி இல்லத்தில் பகுத்தறிவாளர்கள் அ.மாரியப்பன், வே .பாண்டியன், ந.செல்வராசு ஆகியோர் கழகத் தின் பணிகளையும், விடுதலை ஏட்டின் சிறப்பினையும், தமிழர் தலைவர் உழைப்பினையும் உணர்ச்சிபூர்வமாக எடுத் துரைத்து இராயகிரியில் விரை வில் தமிழர் தலைவர் அவர் களை அழைத்து பொதுக் கூட் டம் நடத்தவிருப்பதாக  தெரிவித்தார்கள்.

நகர திராவிடர் கழக அமைப் பாளராக ராஜ்குமாரை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது .

மாவட்டம் முழுவதும் விடு தலை, உண்மை ஏடுகள் நல்ல தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது என்பதை உணர முடிந்தது.

குற்றாலத்தில் நடைபெற உள்ள பெரியாரியல் பயிற்சி முகா மிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக மான வரவேற்பளிப்பது என மாவட்டத்தின் அனைத்து தோழர் களும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள் .

புதிய இளைஞர்கள், மாணவர் கள் கழகத்தில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளதை இப்பயணம் உயர்த்தியதாக பயணக் குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment