'விடுதலை' நாளிதழ் பிறந்தநாள் வெண்பா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

'விடுதலை' நாளிதழ் பிறந்தநாள் வெண்பா

(இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா)

விடுதலை என்னும் பெரியாரின் பிள்ளை,

கெடுதலை நீக்கி, நம் மானம் - நடுதலை,

நாளெல்லாம் ஆற்றும் திராவிட நாளிதழால், 

கோளெல்லாம் பாய்ந்த ஒளி! (1)

வீரமணி என்னும் விளக்கு ஒளிதன்னில், 

காரமணி தன்மான வித்திட்டு - ஆரமணி 

வீசும் இதழாம், விடுதலை தந்ததே

'ஆசிரியர்' என்னும் அடைவு ! (2)

பிறந்தநாள் ஏட்டுக்கா? வீட்டுக்கா? என்றால்,

பிறந்தநம் வீட்டுக்கே இன்பம்! - பிறந்ததே,

மானம் பகுத்தறிவு நீதி, விடுதலையால்

ஆனதே நந்தமிழ் நாடு! (3)


பேரா. கண்ணபிரான் இரவிசங்கர், 

பாரீசு (பிரான்சு).


No comments:

Post a Comment