டில்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

டில்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

 சண்டிகர்,  ஜூன் 13 விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தக் கோரியும், விவசாயிகளைக் காப்பாற்றக் கோரியும் அரியானாவின் குரு சேத்ராவில் விவசாயிகள் டில்லி செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத் தினர்.

அரியானா மாநிலத்தில் சூர்யகாந்தி பயிரை விளைவித்த விவசாயிகள், அந்தப் பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அரியானா மாநில முதலமைச்சர்  மனோகர் லால் கட்டார், குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தார். ஒரு குவிண்டா லுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், சூர்யகாந்தி பயிருக்கு, அரியானா அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை போதாது என்றும் கூடுதல் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும் என்றும்   குருசேத்ரா மாவட்டம் பிப்லி கிராமத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத் தனர். இந்நிலையில் இந்த கூட் டத்துக்குப் பின்னர் அவர்கள் டில்லி செல்லும் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவியுங்கள், விவசாயிகளைக் காப்பாற்றுங்கள் என்று அவர் கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் டில்லிக்கு செல்லும் நெடுஞ்சாலை எண் 44- இல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் டில்லி-சண் டிகர் வழித்தடத்தில் திருப்பி விட்டனர். இந்த மகாபஞ்சாயத்துக் கூட்டத்தில் ஏராள மான அரியானா, பஞ்சாப், உ.பி. மாநில விவசாயிகள் பங்கேற் றனர். குவிண்டால் ஒன்றுக்கு ஆதரவு விலையாக ரூ.6,400 வழங்க வேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொட ரும் என்றும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித் துள்ள பாலியல் புகார் பிரச் சினையிலும், வீராங்கனை களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகிறார் பஜ்ரங் பூனியா என்பது குறிப் பிடத் தக்கது. இந்த மகா பஞ்சா யத்து கூட்டத்தில் பாரதீய கிசான் யூனியன் (சாருனி பிரிவு) விவசாயிகள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment