ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் நிம்மாங்கரையில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் நிம்மாங்கரையில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

தருமபுரி ஜூன் 16- தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் தெருமுனை கூட்டம் 11.6.2023 அன்று மாலை 5 மணியளவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் 

மா. செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  மாவட்ட இளைஞரணி தலைவர் மா. முனியப்பன் வரவேற்புரையாற்றினார். பகுத் தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். 

தலைவர்கள் படங்கள் திறப்பு

தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்து பகுத்தறிவாளர் கழகத் தோழர் மா.சின்னமாது உரையாற்றினார். 

அண்ணல் அம்பேத்கரின் படத்தை திறந்து வைத்து ஊராட்சி மன்ற தலைவர் பச்சியம்மாள் சிவராஜ் (தி.மு.க. ) உரையாற்றினார். 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படத்தை திறந்து வைத்து திராவிடர் கழக மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சிசுபாலன், பச்சியப் பன் உரையாற்றினர்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பார்வையில் கிராம சீர்திருத்தம் என்கின்ற தலைப் பில் அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் உரையாற்றினார். 

பொறுப்பாளர்கள் சிறப்புரை

தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் சிறப்புரை யாற்றினர்.

சிறப்புரைக்கு பின் நிம்மாங்கரை கிராம மக்க ளின் கேள்விகளுக்கு கழக தோழர்கள் பதிலளித் தனர். கலந்து கொண்ட தோழர்களுக்கு இயக்க வெளியீடுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் தோழர் இரா.வில்கிருஷ்ணன் சிபிஎம், நகர இளைஞரணி தலைவர் கண். ராமச் சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் பெ.மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் கு.சரவணன், தொழிலாளர் அணி தோழர் ஊமை.காந்தி, பகுத்தறிவு ஆசிரியரணி இரா.கிருஷ்ண மூர்த்தி, மகளிர் அணி தோழர் சோபியா, காமலா புரம் கிளைக் கழகத் தோழர்கள் இரா.சின்னசாமி, இரா.ராஜா,முருகன், இரா.ராமசாமி, மாஸ்டர் மாணிக்கம், மகளிர் பாசறை கனிமொழி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நிம்மாங் கரை ஊர் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து நிகழ்ச்சியை வெற்றியடைய செய்தனர்.

அப்பகுதி அரசு ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தொழிலாளரணி மாவட்ட தலைவர் பெ.கோவிந் தராஜ் இணைப்புரையாற்றினார். இளைஞர் அணி நகரச் செயலாளர் மு.அர்ஜுனன் நன்றியுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணி வித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களுக்கு அண்ணா.சரவணன், ஊமை.ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர் ஜி.சி.மாதேஸ் மூலம் அனைவருக்கும் இயக்க ஏடுகள் வழங்கப்பட்டது.

இயக்கத்தோழர்கள் மற்றும் ஊர் பொது மக்களும் பெருந்திரளான எண்ணிக்கை யில் கலந்துக்கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

நன்றியுரையை தோழர் இரா.வில்கிருஷ்ணன் நவின்றார்.

No comments:

Post a Comment