செங்கோல் பற்றிய புனைக் கதைகள் : ப.சிதம்பரம் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

செங்கோல் பற்றிய புனைக் கதைகள் : ப.சிதம்பரம் விமர்சனம்

புதுக்கோட்டை, ஜூன் 2 புதுக் கோட்டையில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

டில்லியில் நீதிகேட்டு போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டனத் துக்குரியது. காவல்துறை மல்யுத்த வீரர்களை போல செயல்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. மல்யுத்த வீரர்களை ஒன்றிய அமைச்சரோ அதிகாரிகளோ யாரும் சென்று சந்திக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங் கோல் பற்றி புனைக் கதைகள் அதிகமாக வருகிறது. செங்கோல் பற்றி  ஆளுநர் ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வர லாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1947 ஆக.14-இல் மவுண்ட் பேட்டன் பிரபு டில்லியில் இல்லை, பாகிஸ் தானில் இருந்தார் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு, மற்றவை எல்லாம் புனையப்படுவது. துணைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கா தீர்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment