அமெரிக்காவில் லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

அமெரிக்காவில் லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி

புதுடில்லி, ஜூன் 15 - காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு தலைநகர் டில்லியில் இருந்து சண்டிகருக்கு லாரியில் பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாட்டில் உள்ள லாரி ஓட்டுநர்கள் அன்றாடம் சந்தித்து வருகிற பிரச்சினைகள் பற்றி கேட்டறிவதற்காக அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்ட தாக காங்கிரஸ் கட்சி கூறியது. இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியாகி வைரலாயின.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கும் லாரியில் பயணம் செய்த தகவல் வெளியாகி உள்ளது.அவர் அந்த நாட்டின் தலைநகர் வாசிங்டனில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு 190 கி.மீ. தொலைவுக்கு லாரியில் இந்திய வம்சாவளி டிரை வர்களுடன் பயணம் செய்தார் என்ற தகவல் நேற்று (14.6.2023) வெளியானது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி கூறுகையில், “டில்லியில் இருந்து சண்டிகருக்கு ராகுல் காந்தி லாரி பயணம் மேற்கொண்டது போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர் களின் அன்றாட வாழ்க்கையை மய்யமாகக் கொண்டு அவர்க ளுடன் லாரி பயணம் மேற் கொண்டார்.

அந்தப் பயணத்தின்போது அவர்கள் நடத்தியது இதயம் தொட்டுப்பேசுகிற உரையாடலாக அமைந்தது” என தெரிவித்துள்ளது.

மேலும், “இங்கே கடுமையான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்துடன் லாரி ஓட் டுநர்கள் வாழ்க்கைப் போராட்ட மாக உள்ளது.

ஆனால் அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்கள் தங்களது பணிக்கேற்ப கண்ணியமான கூலிகளைப் பெறு கிறார்கள்” எனவும் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் நடத்திய பயணம் பற்றிய 9 நிமிட காணொலிப் பதிவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment