அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்துவிசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டா? உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 23, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்துவிசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டா? உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ கேள்வி

சென்னை ஜூன் 23  செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை என வாதங் களை அடுக்கி செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, அம்பேத்கரையும் குறிப்பிட்டு வாதாடினார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை   நடைபெற்று வருகிறது.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.. எனவே தங்கள் தரப்பு தான் முதலில் வாதங்களை முன்வைக்க வேண்டும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலாகக் கருதக் கூடாது என அமலாக்கத்துறை மனு வாதம் வைத்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜ ராகி, செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள் ளதால் மனு விசாரணைக்கு உகந்தது. அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது என வாதிட்டார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்ப தற்கு ஆதரவாக உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை. கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல் யாரையும் காவலில் வைக்கக் கூடாது. அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங் களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை என வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

காரணத்தை கூறாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஏ பிரிவை அண்ணல் அம்பேத்கர் சேர்த் திருக்கிறார் என்றும் செந்தில் பாலாஜி யின் மனைவி மேகலா தரப்பு சார்பாக வாதிட்ட வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment