தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி பத்தாயிரம் மெகா வாட்டாக அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி பத்தாயிரம் மெகா வாட்டாக அதிகரிப்பு

சென்னை, ஜூன் 13 - தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள் ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 

இதை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் பல் வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. தமிழ் நாட்டில் காற்றாலை கட்ட மைப்பு வசதி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின்சார உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 

இதுகுறித்து இந்திய காற் றாலை மின்சார உற்பத்தியா ளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரி ரெங்கைய்யன் கூறிய தாவது:- 

காற்றாலை மின்சார உற் பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பு 8 ஆயிரத்து 500 மெகாவாட்டாக இருந்தது. ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் காரணமாக உள்கட்டமைப்பு வசதி படிப் படியாக உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்தது. தற்போது 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது.

தற்போது கடந்த 1-ஆம் தேதி யில் இருந்து 24 மணி நேரமும் காற்று வீசுகிறது. காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது என்று கூட கூறலாம். மின்சார உற்பத்தியும் அதிகரித்து உள் ளது. 

குறிப்பாக கடந்த 1ஆம் தேதியில் இருந்து சராசரியாக 102 மில்லியன் யூனிட்டில் இருந்து 107 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி காற்றாலைகள் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் தான். இந்த ஆண்டுக்கான காற்றாலை பருவ நிலை வருகிற செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் தற்போது அதி கரிக்கும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment