‘புண்ணியமாம், புண்ணியம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

‘புண்ணியமாம், புண்ணியம்!'

போபால், ஜூன் 4 மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லம் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் திலிப் மக் வானா. இவர் குன்வாத் என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென் றுள்ளார். வட இந்தி யாவில் பலவகையாக உருவங்கள் செய்து அதன் ஊடாக மனிதர்கள் சென்றுவந்தால் ‘புண்ணியம்' என்று கதை விட்டுக் கொண்டுள்ளனர். 

அதேபோல் இந்தக் கோவிலில் மிகவும் குறுகிய இடைவெளி உள்ள தூண் உள்ளது. இந்த தூணை யார் ஒருபுறம் சென்று மறுபுறம் வருகிறார்களோ அவர்கள் புண்ணியம் செய்த வர்கள், வரமுடியாமல் போனாலோ அல்லது மாட்டிக் கொண்டாலோ அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று கூறப்படுகிறது.  ஆகை யால் பலர் இந்த தூண் வழியாக நுழைந்து வெளிவருகின்றனர். 

அந்தக் கோவிலுக்குச்சென்ற பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர் திலிப் மக்வானா தூணைக் கடக்க முற்பட்டார். ஆனால் அவரால் மறுபுறம் கடக்க முடியவில்லை. இதனால் அவர் மாட்டிக் கொண்டார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு எந்தப் பகுதியில் நுழைந்தாரோ அதே பகுதியில் அவர் வெளியே வந்தார். சட்ட மன்ற உறுப்பினர் சிக்கிக் கொண்டதை அடுத்து அங்கு கூட்டம் அதிகம் கூடி விட்டது. கூட்டத்தில் உள்ளவர்கள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அதிகம் பாவம் செய்திருப்பார் என்று  கிண்டல் அடித்து வருகின்றனர்.   

இதேபோல் யானை மற்றும் காளை சிலை களின் ஊடாக சென்று வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொண்ட கூத்தும் அடிக்கடி வட இந்தியாவில் நடக்கும்.

என்னே மூடத்தனம்!

No comments:

Post a Comment