மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 20-  மயிலாடுதுறை நகர திராவிடர் கழகத்தில் சார்பாக 17.6.2023 அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறை சின்னக் கடை வீதி யில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா நகரத் தலைவர் சீனி. முத்து தலைமையில் நடைபெற்றது.

துவக்கத்தில் தந்தை பெரியார் கலைக்குழுவைச் சேர்ந்த அன்பு அருள் ஆகியோர் இயக்கப் பாடல் களைப் பாடி பொது மக்களின் பாராட்டைப் பெற்றனர். 

மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நகர செயலாளர் பூ.சி. காமராஜ் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலாளர் அரங்க. நாகரத் தினம், குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா. முருகை யன், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், சீர்காழி ஒன்றியத் தலைவர் சா. சந்திரசேகரன்,  கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி. பாண்டியன்  ஆகியோர் முன்னிலை வகிக்க மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ஞான. வள்ளுவன் தொடக்கவுரை ஆற்றினார். 

மாவட்ட ப.க. தலைவர் அ.சாமிதுரை, மயிலாடு துறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்ட மன்றத்தொகுதி உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். 

அவர் தனது உரையில், வைக்கம் போராட் டத்தில் தந்தை பெரியாரின் அளப்பரிய பங்கினை யும், அவரது தொடர் போராட்டத்தாலும் வலிமை யாலும் பெற்ற வெற்றிக்காக "வைக்கம் வீரர்" என்று திரு.வி.க. அவர்களால் பாராட்டப்பட்ட வரலாற்றை யும் மறைக்க முயலும் சங்பரிவார் கூட்டத்தை அடையாளம் காணவேண்டும் என்று குறிப் பிட்டார்.

மேலும் திராவிட இயக்க வரலாற்றில் தந்தை பெரியாரின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறிடக் காரணமாக பல்வேறு சட்டங்களையும் ஆணை களையும் பிறப்பித்து “திராவிட மாடல்“ ஆட்சியின் நாயகராகத் திகழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று சொல்லி, நீண்ட பட்டியலிட்டுக்காட்டி அதனை சற்றும் வழுவாமல் காத்து இந்திய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவை யானது திராவிட மாடலே என்பதை நிரூபித்துக் காட்டிவருபவர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் பேசினார். 

கூட்டத்திற்கு வருகை தந்து அமர்ந்திருந்த வர்களைக் கடந்து தொலைதூரம் வரையிலும்  சாலையின் இருமருங்கிலும் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் இளை ஞர்களுமான பலர் உற்சாகத்துடன் மேடையேறி தோழர் மதிவதனியின் பேச்சினைப் பாராட்டி பரிசு களை அளித்ததும் ஒளிப்படமெடுத்துக்கொண்டதும் உணர்ச்சி மயமாக இருந்தது.

கூட்டத்தில் மயிலாடுதுறை நகரத் துணைத் தலைவர் இரெ.புத்தன்,    ஜி.கே.மணிவேல், 

பி. இராசேந்திரன்,  குத்தாலம் ஒன்றியச் செயலாளர் கு. இளமாறன்,  சீர்காழி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. செல்வம், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ச. தமிழ்மணி,  கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ. பாண்டுரங்கன், ஆசிரியர் அண்ணாதாசன், தங்க செல்வராஜ், கே ஜி.நாகராஜன் மற்றும் திராவிட இயக்க தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கொண்டனர்.

நிறைவாக மாவட்ட இளைஞரணித் தலைவர் க. அருள்தாஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment