ரயில்வேயில் எத்தனைத் தமிழர்க்கு வேலை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

ரயில்வேயில் எத்தனைத் தமிழர்க்கு வேலை?

2014 முதல் பா.ஜ.க. ஆட்சியில் மோடி தான் பிரதமராக ஆக உள்ளார்.  தமிழை புகழ்கிறார்னு புளகாங்கிதம் அடைந்து சொல்லும் உங்களை கேட்கிறேன்.

1) கடந்த 9 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் (சென்னை தலைமையிடம்)  எத்தனை தமிழர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் என்று கூற முடியுமா?  

2) நெய்வெலி லிக்னைட்,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், சுங்கம் மற்றும் கலால் துறையில் வருமானவரித் துறையில்  தமிழ்நாட்டில் உள்ளவற்றில் கடந்த 9 ஆண்டுகளில் எத்தனை தமிழர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் என்று கூற முடியுமா? 

3) தமிழ்நாட்டில் இயக்கப்படும் நீண்ட தூர ரயில்களில் LHB பெட்டிகள் எத்தனை ரயில்களில் உள்ளன?  இந்த பெட்டிகள் சென்னையில் தான் தயாரிப்பு - ஆனால் இங்கே இயக்கப்படுவதில்லை.  அநேக ரயில்களில் பழைய மிசிதி பெட்டிகள் தான்.  மிகவும் மோசமான பெட்டிகள் தான்; பராமரிப்பு இல்லை.  இந்த பெரம்பூர் தொழிற்சாலையில் மற்றும் பொன்மலையில்  கடந்த 9 ஆண்டுகளில் எத்தனை தமிழர்களுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் - கூறமுடியுமா?   

எத்தனை புதிய ரயில்கள் கடந்த 9 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டது - தமிழ்நாட்டில் இயக்கப்பட்டது? 

கேட்மேன் இல்லை என திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ரயில்களை இயக்காதது - அப்புறம் ஒரு ரயிலை திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் இடையே ஒரு கேட் மேனை ரயிலில் ஏற்றி ஒவ்வொரு கேட் முன் நிறுத்தி கேட்டை பூட்டி பின் கடந்து நிறுத்தி கேட்டை திறந்து மீண்டும் ரயிலில் ஏறி இயக்கியது உலக அளவில்  சாதனை தான் - இந்த ரயில் 72 கேட்டிலும் இப்படி நின்று சென்றதே வரலாறு. 

ஏன் பயணிகள் ரயிலுக்கு விரைவு கட்டணம் வசூல்? குறைந்த பட்சம் ஏறி இறங்கினாலே 30 ரூபாய் மற்ற ரயில்வே ஷோன்களில் 10 ரூபாய்.  இந்தியா ஒரே தேசம் என்று சொல்லி கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதா?  சுங்கச் சாவடி கட்டணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 9 ஆண்டில் பல மடங்கு உயர்த்தியது யாரு? 

இதை எல்லாம் தமிழ்நாடு பாஜக ஆதரிக்கிறதா?


No comments:

Post a Comment