அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி முறியுமா? அண்ணாமலைமீது அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி முறியுமா? அண்ணாமலைமீது அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம்!

சென்னை, ஜூலை 13 ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழ்நாட் டின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. மேனாள் முதலமைச்சர் (ஜெயலலிதா) நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார். அ.தி.மு.க. உடனான கூட்டணி முறிய வாய்ப்பு உள் ளதா? என்ற கேள்விக்கு, "என்னு டைய கட்சியை வலுப்படுத்த வேண்டும். இதற்காக குரல் கொடுத்து, என்னுடைய தொண் டர்களை உற்சாகப்படுத்தி அவர் களுக்கு தொலைநோக்கு பார் வையை காட்ட வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் இருப்பு என்பது ஆட்சிக்கு வருவதுதானே தவிர, எப்போதும் கூட்டணியில் நீடிப்பதற்காக அல்ல" என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

 அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள் ளது. ஜெயலலிதா குறித்த அண் ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனி சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

ஜெயக்குமார் பேட்டி

இதுதொடர்பாக அ.தி. மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று (12.6.2023) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதில், தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு இருக்கிறது. அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கத்துக்குட்டியாக இருக்கும் அண்ணாமலைக்கு வரலாறு, பாரம்பரியம் தெரியாது. தன்னை முன்னிலைப்படுத்த அவ்வப்போது அ.தி. மு.க. மீது சேற்றை வாருகின்ற செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மறைந்த தலைவரும், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந் திருக்கும் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து போயிருக்கிறார்கள்.

இதற்கான நிலையை அண் ணாமலை உருவாக்கி இருக்கிறார். அண்ணாமலைக்கு முன்பு இருந்த தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக பொன்.ராதாகிருஷ் ணன், தற்போது ஆளுநர்ராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந் தரராஜன், அமைச்சராக இருக்கும் எல்.முருகன் ஆகியோரது கால கட்டத்தில் தோழமை உணர் வோடு, கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து கூட்டணிக் கட்சி யில் இருந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் ஒற்றுமையாக இருந் தனர். அண்ணாமலையை பொறுத்தவரை பொறுப்பேற்ற நாளில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிரதானமாக வர வேண்டும் என்று கூட்டணி தர்மத்தை மீறியிருக் கிறார். ஜெயலலிதாவை விமர் சித்ததை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அண்ணா மலையை கண்டிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து வருகிறோம். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும்போது, கூட்டணி தொடர்கிறதா? இல் லையா? என்ற கேள்வி நிச்சயமாக எழும். இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் தான். மாநில தலைவர் என்ற பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதனால்தான் வாய்க்கு வந்தப்படி அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டணி தர்மத் தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அண்ணாமலையின் செயல்பாடு களை பார்க்கும்போது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி தொடரக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வரக்கூடாது என்ற நிலையில்தான் அண்ணாமலை இருக் கிறாரா? ஏனெனில் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.

எனவே அண்ணாமலை வாயை அடக்கிக் கொண்டு கூட் டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அவர்களுக்கு நல்லது. ஏனெனில் இதில் எங்களுக்கு இழப்பு கிடையாது. ஜெயலலிதாவை பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்யும்போது, எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அண்ணாமலை அ.தி .மு.க.வை பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண் டும். அ.தி.மு.க. என்பது ஆலமரம். பா.ஜ.க. என்பது செடி. சட்ட சபையில் 4 இடங்களை பா.ஜ.க. பிடித்ததற்கு, அ.தி.மு.க.தான் கார ணம். அ.தி.மு.க.வுடன் இருந்தால் தான், பா.ஜ.க.வுக்கு பலம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

இதேபோல் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வமும் அறிக்கை வெளியிட்டுள் ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெய லலிதா பற்றியும், அ.தி.மு.க. ஆட்சியை பற்றியும் தரக்குறைவாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின் மையை காட்டுகிறது. தமிழ் நாட்டில் நடைபெற்ற பல ஆட் சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், மேனாள் முதலமைச்சர்கள் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட வர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த பேச்சு தொண்டர்கள் மத்தி யில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ''கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத் தான்'' நினைவுபடுத்துகிறது. உண்மையை உணராமல், மனம் போன போக்கில், 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று பேசுவதை இனி வருங் காலங்களில் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறி யுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலை யில் ஒரே கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மோதிக் கொள்வது அரசியல் வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment