ஜாதி ஒழிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்தினை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 22, 2023

ஜாதி ஒழிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்தினை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை

அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட் டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த சட்ட எரிப்பு வீரர் சா. துரைக்கண்ணு அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி கடந்த 17.6.2023 அன்று காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது. ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையேற்று படத்தினை திறந்து வைத்து நினைவு ரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மாவட்ட காப்பாளர் சு.மணிவண்ணன், சட்ட எரிப்பு வீரர் தத்தனூர் ராமசாமி, உல்லியக்குடி சிற்றரசு திமுகவைச் சார்ந்த அ.சாகுல் ஹமீது, பெரியார் பெருந்தொண்டர் மருதூர் பெரியசாமி கால்நடை மருத்துவர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் பொய்யாமொழி, கோரைக்குழி கலியபெருமாள், வழக்குரைஞர் சா.பகுத்தறிவாளன் ஆகியோர் முன்னிலை வகித்து நினைவுரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் தமது நினைவுரையில், ஜாதி ஒழிப் பிற்காக அரசியல் சட்டத்தை எரித்து 18 மாதங் கள்  வரை சிறையிலிருந்த தியாகச் செம்மலாக விளங்கிய அய்யா துரைக்கண்ணு அவர்களை நலமாக இருக்கும் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், நாங்களும் வந்து சந்தித்து சிறப்பு செய்திருக்கிறோம். அவருடைய தொண்டு அளப்பரியது. எண்ணற்ற பெரியார் பெருந்தொண்டர்களும் கருப்பு மெழுகுவத்தி களாக இந்த சமூகத்திற்கு ஆற்றிய தொண்டி னால் தமிழ் சமூகம் ஏற்றமடைந்திருக்கிறது - மாற்றம் அடைந்திருக்கிறது.அவரது மறை விற்குப் பின்னால் இந்த படத்திறப்பு நிகழ்ச்சி யினை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய குடும் பத்தினர் பாராட்டுக்குரியவர்கள். உத்திரகிரியை என்றபெயரால் பார்ப்பனர்கள் தமிழ் சமூகத்தை இழிவுபடுத்துவதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி மறைந்தவர்களின் சிறப்பை விளக்கி நடத்துமாறு கேட்டுக்கொண்டு நினைவுரை யாற்றினார்.

ஜாதி ஒழிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்தினை  

பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை

பங்கேற்றோர்

மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந் திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மா.சங்கர், பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக், மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன், செயலாளர் வெ.இளவரசன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப் பாளர் இரா.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மறவனூர் ப.மதியழகன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணிகண்டன், ஆண்டிமடம் த.கு. பன்னீர் செல்வம், கோரைக்குழி ஆசைத்தம்பி, மாவட்ட மாணவர் கழக தலைவர் த.சிவமணி, குழுமூர் சுப்பராயன், விளாங்குடி விஜய் கமலக்கண்ணன், திருமானூர் ஒன்றிய அமைப்பாளர் சு.சேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும், உறவினர்களும் பங்கேற்றனர்.

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சா.துரைக்கண்ணு அவர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர்.மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந் திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மா.சங்கர், பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக், மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன், செயலாளர் வெ.இளவரசன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப் பாளர் இரா.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மறவனூர் ப.மதியழகன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணிகண்டன், ஆண்டிமடம் த.கு. பன்னீர் செல்வம், கோரைக்குழி ஆசைத்தம்பி, மாவட்ட மாணவர் கழக தலைவர் த.சிவமணி, குழுமூர் சுப்பராயன், விளாங்குடி விஜய் கமலக்கண்ணன், திருமானூர் ஒன்றிய அமைப்பாளர் சு.சேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும், உறவினர்களும் பங்கேற்றனர்.

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சா.துரைக்கண்ணு அவர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment