இந்தியாவின் போற்றத்தக்க மகன் கோட்சேவா? காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

இந்தியாவின் போற்றத்தக்க மகன் கோட்சேவா? காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, ஜூன் 11 - “காந்தியாரை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா?” என்று ஒன்றிய அமைச்சருக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான கபில் சிபல், “கோட்சே இந்தியா வின் போற்றத்தக்க மகன் என்றும், முகலாயர்களைப் போல் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவரில்லை என்றும், இந்தியாவில் பிறந்தவர் என்றும் கூறி இருக் கிறீர்கள். உங்களின் (ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்) இந்தக் கருத்தால், பலர் உங்களை இந்தியாவின் போற்றத் தக்க மகன் என்று அழைக்க மாட்டார்கள். கொலையாளி யின் பிறந்த இடத்தைக் கொண்டு அவரைப் போற்ற முடியாது. இந்த கருத்தை பிரதமரும், உள்துறை அமைச் சரும் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித் துள்ளார்.

இதனையடுத்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கபில் சிபல், “கிரிராஜ் சிங்கின் கூற்றுப்படி கோட்சே நல்லவர். ஆங்கிலேயர்களுக்கு உதவிய அமைப்பு ஆர்எஸ்எஸ். காந்தியாரை அவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? இதுபோன்ற மனநிலை காந்தி யாரின் கொள்கைகளுக்கு எதிரானது” என தெரிவித் துள்ளார். மேலும், “வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்க வேண்டும். ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அதன் மூலம், தற்போதைய அரசை வீழ்த்த வேண்டும். நாடாளு மன்றத் தேர்தலின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment