மணிப்பூரும் சங்பரிவாருக்கு இரையாக்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 22, 2023

மணிப்பூரும் சங்பரிவாருக்கு இரையாக்கப்பட்டது

மணிப்பூரில் சங்பரிவார் எதை விதைக்கிறதோ அதையே அறுவடை செய் கிறது. இங்கு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்புகள் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இரண்டு பிரச்சினைகள்: மலைப்பகுதியில் கசகசா சாகுபடி மற்றும் காடழிப்பு. பல  ஆண்டுகளாக, இந்த இரண்டு பிரச்சனை களுக்கும் குக்கி இனத்தவரே காரணம்  என்று மெய்தெய் இன மக்கள் மத்தியில் பர வலான பிரச்சாரம் உள்ளது. இதற்காக இணைய ஊடகங்கள் ஊட்டி வளர்க்கப்பட்டன. மெய் தெய்களுக்கு பட்டியல் பழங்குடி தகுதி வழங்குவது குறித்து பரிசீலிக்கும் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, மாநிலத்தில் வெடித்த கலவரம் கிட்டத்தட்ட 50 நாட்களாக நீடித்து வருகிறது. இதற்கு  சங்பரிவார் நடத்திய பிரச்சாரம் பின்ன ணியை உருவாக்கியுள்ளது.

போதை மாஃபியாவை கட்டுப்படுத்தாமல்...

மணிப்பூரின் மலைப் பகுதியில் 15,000  ஏக்கருக்கு மேல் கசகசா குக்கி விவசாயி களால் வளர்க்கப்படுகிறது. இதுதான் அவர் களின் முக்கிய வருமானம். இருப்பினும், போதைப்பொருள் மாஃபியாவுடன் கசகசா  சாகுபடியை இணைத் துள்ளது சங்பரிவா ரின் பிரச்சாரம். கசகசா இலைகள் உண்  ணக்கூடியவை. இதன் பூக்கள் போதைப் பொருள் தயாரிப்பதற்கு தவறாக பயன்படுத்  தப்படுகின்றன. மெய்தெய் பிரிவில் உள்ள அர சியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களால் போதைப் பொருள் மாஃபியா கட்டுப்படுத்தப்படுகிறது. காடுகளை வேட்டையாடும் விடயத்திலும் இதே நிலைதான். வெட்டப்பட்ட மரங்களை மெய்தெய் தலைவர்கள் விலைக்கு வாங்குகின்றனர். குக்கிகள் இதிலிருந்து ஒரு சிறிய தொகையைப் பெறு கின்றனர். சங்பரி வாரும், பாஜக அரசும் மாஃபியா குழுக்களை  ஒடுக்க நடவடிக்கை எடுக்காமல் குக்கி எதிர்ப்பு  பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

குக்கி (கிறிஸ்தவ) எதிர்ப்பு பிரச்சாரம்

இதனால் ஏற்பட்ட நச்சு சூழல் மணிப்பூரை கலவர பூமியாக மாற்றியது. இப்போது பள்ளத்  தாக்கில் குக்கிகளும், மலைகளில் மெய்தெய்களும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குக்கிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருப்பதால், குக்கி எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற  போர்வையில் சங்பரிவாரம் கிறிஸ்தவ எதிர்ப்புகளைப் பரப்ப முடிந்தது. பள்ளத்தாக்கில் மெய்தெய் கிறிஸ்த வர்களின் 276 தேவாலயங்கள் இடிக்கப்பட்டதே இதற்குச் சான்றா கும். மெய்தெய் தேவாலயங்கள் பொதுவாக  தற்காலிக கட்டமைப்புகள். ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள சிறு சமூகங்களின் தேவைக் காக கட்டப்பட்ட இந்த தேவாலயங்கள் குறு கிய காலத்தில் இடிக்கப்பட்டன. நன்கு கட்டப்  பட்ட இருபத்தைந்து குக்கி தேவாலயங்களும் அழிக்கப்பட்டன.

 துப்பாக்கிகள்  எங்கே போயின?

மணிப்பூரில் பா.ஜ.க. ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஆதரிக்கும் ஆரம்பை தெங்கோல், மெய்தெய் லீபுன் ஆகிய பயங்கர வாத அமைப்புகள் ஒரு பக்கமும், குக்கி  ஆயுதக் குழுக்கள் மற்றொரு பக்கமும் போர்  போன்ற கலவரத்தை நடத்தி வருகின்றன. மெய்தியின் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தும் போது மாநில காவல்துறை செயலற்ற நிலை யில் உள்ளது. காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் எங்கே காணாமல் போயின என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதே நேரத் தில், நாற்பதுக்கும் மேற்பட்ட குக்கிகள் பயங்கர வாதிகளைக் கொன்றதாக முதலமைச்சர் பைரேன் சிங் கூறினார். 2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்த லின் போது, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா  பிஸ்வா சர்மா குக்கி கிளர்ச்சி அமைப்புகளுடன் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட வர்களின் மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ள போதிலும், சுமார் 200 பேர் உயிரிழந்துள்ள தாக பல்வேறு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம டைந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. சுமார் இருநூறு கிராமங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. 60,000 பேர்  அகதிகள் ஆனார்கள். மூன்று, நான்கு மாடிகள்  கொண்ட வீடுகள்கூட இடிக்கப்பட்டன. மாநி லத்தின் மூத்த தலைவர்கள் கூட பாதுகாப்பாக  இல்லை. ஒன்றிய, மாநில அமைச்சர்கள், அரசு ஊழியர்களின் வீடுகள் தாக்கப்படுகின்றன. 

முற்றிலும் சீர்குலைந்த  சட்டம் - ஒழுங்கு

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும்  சீர் குலைந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், மணிப்பூர் மக்களவை உறுப்பினருமான ராஜ்குமார் ரஞ்சன்சிங் வேதனை தெரிவித்துள்ளார். மணிப்பூ ரின் நிலைமை குறித்து மேனாள் ராணுவ தளபதி வி.பி.மாலிக் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். ஜெனரல் நிஷிகாந்த சிங்கி மாநி லத்தின் அவல நிலையை ட்விட்டரில் பகிர்ந் துள்ளார். லிபியா, சிரியா, நைஜீரியா, லெப னான் போன்ற நாடுகளின் நிலைமை போலவே மணிப்பூரின் நிலை உள்ளதாகவும், ஆட்சி யில்லா மாநிலமாக மாறிவிட்டதாகவும் இம்பா லைச் சேர்ந்த நிஷிகாந்த சிங் ட்வீட் செய்தி ருந்தார். 40 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரியான ஒருவர்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலத்தில்...

மணிப்பூரின் நிலைமை அண்டை மாநிலங் களிலும் எதிரொலிக்கிறது. மணிப்பூரில் சிறு பான்மையினர் துன்புறுத் தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மிசோரமின் மெய்தீஸ் தலையிட வேண்டும் என்று மிசோரம் மாணவர்களின் பொது மேடை எம்எஸ்டிபி கோருகிறது. மிசோரமில் மெய்தெய்கள் பாதுகாப்பாக இருக்கும்போது, மணிப்பூரில் தங்கள் சகோதரர்கள் துன்பப்படுவதை அவர்களால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. மணிப் பூர் பிரச்சினை விரைவில் தீர்க்கப் படாவிட்டால், எதிர் காலம் மோசமாக இருக்கும் என்று எம்எஸ்டிபி அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அமைதியின்மை பாஜக வின் கூற்றுக்கு முரணானது. பாஜக ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியையும் முன் னேற்றத்தையும் அடைந்துள்ளன என்ற கூற்று நொறுங்கி வருகிறது. சங்பரிவார் வெறுப்பு விதைகளை மட்டுமே விதைத்துள்ளது.

தேசாபிமானியில் ஸாஜன் ஏவுஜின்

தமிழில்: சி.முருகேசன்

நன்றி:  'தீக்கதிர்' 21.6.2023


No comments:

Post a Comment